
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் ஃபெடரர், சாம் கியூரி, மரின் சிலிச், தாமஸ் பெர்டிச் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இலண்டனில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்றைய ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் அமெரிக்காவின் சாம் கியூரி மற்றும் முர்ரே மோதினர்.
இதில் 3-6, 6-4, 6-7 (4), 6-1, 6-1 என்ற செட் கணக்கில் முர்ரேவை தோற்கடித்தார் சாம் கியூரி. 42-வது கிராண்ட்ஸ்லாம் தொடரில் விளையாடி வரும் சாம் கியூரி, முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
சாம் கியூரி தனது அரையிறுதியில் குரோஷியாவின் மரின் சிலிச்சை எதிர்கொள்கிறார்.
மரின் சிலிச் தனது காலிறுதியில் லக்ஸம்பர்க்கின் ஜில்ஸ் முல்லருடன் மோதினார். இதில், 3-6, 7-6 (6), 7-5, 5-7, 6-1 என்ற செட் கணக்கில் லக்ஸம்பர்க்கின் ஜில்ஸ் முல்லரைத் தோற்கடித்தார் மரின்.
11-ஆவது முறையாக விம்பிள்டனில் விளையாடி வரும் மரின் சிலிச், முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
மற்றொரு காலிறுதியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் மற்றும் கனடாவின் மிலோஸ் ரயோனிச்சுடன் மோதினார். இதில், 6- 4, 6- 2, 7- 6 (4) என்ற நேர் செட்களில் கனடாவின் மிலோஸ் ரயோனிச்சை வீழ்த்தினார் ரோஜர்.
இதன்மூலம் 'ஓபன் எராவில்' விம்பிள்டனில் அரையிறுதிக்கு முன்னேறிய 2-வது மூத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார் ரோஜர்.
ஃபெடரர் தனது அரையிறுதியில் செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச்சை சந்திக்கிறார்.
பெர்டிச் தனது காலிறுதியில் செபியாவின் ஜோகோவிச்சோடு மோதினார். இதில் 7- 6 (2), 2- 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது ஜோகோவிச் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். அதனால், பெர்டிச் வெற்றிப் பெற்றார் என்று அறிவிக்கப்பட்டார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.