மீண்டும் வருகிறது தமிழ்நாடு பிரிமீயர் லீக்; சென்னையில் 22-ஆம் தேதி தொடங்குகிறது…

Asianet News Tamil  
Published : Jul 12, 2017, 10:24 AM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
மீண்டும் வருகிறது தமிழ்நாடு பிரிமீயர் லீக்; சென்னையில் 22-ஆம் தேதி தொடங்குகிறது…

சுருக்கம்

Comes back to Tamilnadu Premier League Starting in Chennai on 22nd ...

இரண்டாவது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 22-ஆம் தேதி தொடங்குகிறது.

தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டது.

தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை சூப்பர் ஜெயன்ட், திருவள்ளூர் வீரன்ஸ், திருச்சி வாரியர்ஸ், காரைக்குடி காளை, கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் மோதிய இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 2-வது இடம் பெற்றது.

இரண்டாவது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 22-ஆம் தேதி தொடங்குகிறது.

தொடக்க லீக் ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் ஆதரவுடன் நடைபெறும் 2-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியின் அறிமுக விழா சென்னையில் நடந்தது.

இதில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் எல்.பாலாஜி அளித்த பேட்டியில், ‘இரண்டாவது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 22-ஆம் தேதி தொடங்குகிறது.

முதலாவது டி.என்.பி.எல். போட்டி போலவே இந்த ஆண்டு போட்டியும் மிகவும் பிரபலம் அடையும். ஐ.பி.எல். போட்டி போல் இந்த போட்டிக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது.

கடந்த ஆண்டு டி.என்.பி.எல். மூலம் நடராஜன் உள்பட 4 வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றனர். அது இந்த ஆண்டு மேலும் அதிகரிக்கும் என்று நம்புகிறேன்’ என்று பேசினார். 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs NZ 1st ODI: மரண காட்டு காட்டிய விராட் கோலி..! இமாலய இலக்கை ஊதித்தள்ளிய இந்தியா..
நியூசிலாந்து அணியில் வேலூர் இளைஞர்.. ரஜினியின் வெறித்தனமான ரசிகர்.. யார் இந்த ஆதித்யா அசோக்!