மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது இந்தியா…

Asianet News Tamil  
Published : Jul 12, 2017, 10:18 AM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது இந்தியா…

சுருக்கம்

Women World Cup Cricket India and Australia meet today

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்டின் 23-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கும், தோல்வி அடையும் அணி வீட்டுக்கும் செல்லும்.

11-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது.

எட்டு அணிகள் மோதும் இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் வாய்ப்பை இழந்து விட்டன. அரையிறுதியின் நான்கு இடங்களுக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் பிரிஸ்டலில் இன்று நடைபெறும் 23-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஆறு முறை சாம்பியன் வென்ற ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது.

இந்திய அணி லீக் ஆட்டங்களில் இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கை அணிகளை தொடர்ச்சியாக தோற்கடித்தது. ஆனால் முந்தைய லீக் ஆட்டத்தில் 115 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்தது.

இதேபோல் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி தனது முதல் 4 லீக் ஆட்டங்களில் வெஸ்ட்இண்டீஸ், இலங்கை, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தியது. தனது கடைசி ஆட்டத்தில் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது.

இந்த ஆட்டம் இரு அணிக்கும் முக்கியமானதாகும். தலா எட்டு புள்ளிகளுடன் இருக்கும் இரண்டு அணிகளில் வெற்றி பெறும் அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும்

இந்திய அணியின் விவரம்:

மிதாலி ராஜ் (கேப்டன்), எக்தா பிஷ்ட், ராஜேஸ்வரி கெய்க்வாட், கோஸ்வாமி, மான்சி ஜோஷி, ஹர்மன்பிரீத் கவுர், வேதா கிருஷ்ணமூர்த்தி, மந்தனா, மோனா மேஷ்ரம், ஷிகா பாண்டே, பூனம் யாதவ், நுஷாத் பர்வீன், பூனம் ரவுத், தீப்தி ஷர்மா, சுஷ்மா வர்மா.

ஆஸ்திரேலியா அணியின் விவரம்:

மெக் லேனிங் (கேப்டன்), சாரா அலெய், கிறிஸ்டன் பீம்ஸ், அலெக்ஸ் பிளாக்வெல், நிகோல் பால்டன், ஆஷ்லிக் கார்ட்னெர், ராச்சல் ஹெய்ன்ஸ், அலிசா ஹீலே, ஜெஸ் ஜோனசென், பெத் மூனி, எலிஸ் பெர்ரி, மெகன் ஸ்கப்ட், பெலின்டா வகரெவா, வில்லானி, அமந்தா ஜாட் வெலிங்டன்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs NZ 1st ODI: மரண காட்டு காட்டிய விராட் கோலி..! இமாலய இலக்கை ஊதித்தள்ளிய இந்தியா..
நியூசிலாந்து அணியில் வேலூர் இளைஞர்.. ரஜினியின் வெறித்தனமான ரசிகர்.. யார் இந்த ஆதித்யா அசோக்!