டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்த தங்க மகன் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிவதற்கு பயன்படுத்தும் ஈட்டியின் எடை மட்டும் 800 கிராம் என்றும், நீளம் 260 செ.மீ ஆகும்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் நேற்று தொடக்க விழாவுடன் பிரம்மாண்டமாக தொடங்கியது. செய்ன் நதிக்கரையில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் கொட்டும் மழையிலும் நனைந்தபடி விளையாட்டு வீரர்கள் அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தினர். இதில், இந்தியா சார்பில் பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து மற்றும் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் இருவரும் இந்திய தேசிய கொடியை ஏந்தி அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தினர்.
Paris Olympics 2024 – ஜூலை 27, இந்தியா விளையாடும் போட்டிகள் என்னென்ன? முதல் பதக்கம் வெல்லுமா?
இதில், இந்திய வீரர்கள் வெள்ளை நிற உடையையும், வீராங்கனைகள் மூவர்ணத்தில் சேலை அணிந்தும் இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியை கீரீஸ் நாடு ஆரம்பித்து வைக்க பிரான்ஸ் முடித்து வைத்தது. கலை நிகழ்ச்சிகள், வான வேடிக்கைகள், லேசர் என்று ஒலிம்பிக் தொடர் பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை கிட்டத்தட்ட 3 லட்சம் ரசிகர்கள் கண்டு ரசித்துள்ளனர்.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரானது 32 விளையாட்டுகளை கொண்டுள்ளது. இந்த 32 விளையாட்டுகளில் 329 போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில், இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு 16 விளையாட்டுகளில் கலந்து கொண்டு விளையாடுகின்றனர். பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடக்க விழாவைத் தொடர்ந்து இன்று முதல் போட்டிகள் நடத்தப்படுகிறது. இன்றைய போட்டியில் பேட்மிண்டன், டென்னிஸ், ஹாக்கி, ரோவிங், துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், குத்துச்சண்டை, ஹாக்கி ஆகிய போட்டிகளில் விளையாடுகிறது. இதில், பதக்கத்திற்கான போட்டியிலும் இந்திய அணி விளையாடுகிறது.
பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்கும் துப்பாக்கி சுடுதல் 10 மீ ஏர் ரைபிள் கலப்பு அணி தகுச்சுற்று போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் இறுதிப் போட்டியான பதக்க சுற்றுக்கான போட்டியில் விளையாடும். பதக்க சுற்று போட்டி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் விளையாட உள்ளார். ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பதற்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் உடன் உரையாடல் ஒன்றை நிகழ்த்தினார். அப்போது தினேஷ் கார்த்திக் தனது கையில் ஈட்டி எடுத்து எறிய முயற்சித்தார். ஆனால், ஈட்டி தூக்குவதற்கு கடினமாக இருப்பதாக கூறினார்.
அதற்கு பதிலளித்த நீரஜ் சோப்ரா, புதிதாக யார் கையில் எடுத்தாலும் ஈட்டி கடினமாகத் தான் இருக்கும். ஆனால், இதனுடைய எடை வெறும் 800 கிராம் தான், நீளம் 260 செமீ தான் என்று தெரிவித்தர். மேலும், ஈட்டி எறிவதற்கு 40 சதவிகித உடலையும், 60 சதவிகிதம் கால்களையும் பயன்படுத்த வேண்டும். எட்டி எறிய ஓட வேண்டி இருக்கும். அப்போது கடைசி நிமிடத்தில் வேகமாக ஓடி வந்து எறிந்தால் தான் ஈட்டியை வெகு தூரமாக எறிய முடியும் என்றார்.
இதுவரையில் 88 மீட்டர் தூரத்திற்கு மேல் வீசிய நீரஜ் சோப்ரா இந்த முறை 90 மீட்டருக்கும் அதிகமாக வீசினால் தான் அவரால் பதக்கம் வெல்ல முடியும். கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம் உள்பட மொத்தமாக 7 பதக்கங்களை மட்டுமே கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.