யார்க்கர் போடுறதுல அவருதான் பெஸ்ட்!! இந்திய பவுலரை புகழ்ந்து தள்ளிய வாசிம் அக்ரம்

By karthikeyan VFirst Published Jan 20, 2019, 10:15 AM IST
Highlights

ஒருநாள் போட்டிகளுக்கு மட்டுமல்லாது டெஸ்ட் போட்டிகளுக்கும் யார்க்கர் மிகச்சிறந்த ஆயுதம். ஏன் சொல்லுகிறேன் என்றால், நானும் வக்கார் யூனிஸும் எங்கள் காலக்கட்டத்தில் யார்க்கர்களை நிறைய பயன்படுத்தியுள்ளோம் - வாசிம் அக்ரம்.
 

யார்க்கர் பந்துகளை வீசுவதுதான் பும்ராவின் சிறப்புத்தன்மை என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் புகழாரம் சூட்டியுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம், ஸ்விங் பவுலிங் போடுவதில் வல்லவர். இவரது காலத்தில் ஆடிய தலைசிறந்த பேட்ஸ்மேன்களான சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா போன்ற ஜாம்பவான்களையே தனது வேகப்பந்து வீச்சால் மிரளவிட்டவர். 

அவரது மனதில் பட்ட கருத்தை வெளிப்படையாக கூறக்கூடிய வாசிம் அக்ரம், மிகவும் நேர்மையாக விமர்சனம் செய்பவர். எனவே இவரிடமிருந்து பாராட்டை பெறுவது சாதாரண விஷயமல்ல. அப்படிப்பட்ட வாசிம் அக்ரமிடமிருந்தே பும்ரா பாராட்டை பெற்றவர்.

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு பாராட்டு தெரிவித்த வாசிம் அக்ரம், பும்ராவை பாராட்டி பேசினார். அப்போது, தற்போது ஆடும் வேகப்பந்து வீச்சாளர்களில் பும்ரா சிறந்த யார்க்கர்களை வீசுகிறார். பும்ராவின் பவுலிங் ஆக்‌ஷன் வித்தியாசமானது, விதிவிலக்கானது. இந்த வித்தியாசமான பவுலிங் ஆக்‌ஷனிலும் பந்தை அருமையாக ஸ்விங் செய்கிறார். நல்ல வேகத்தில் பவுன்ஸை வீசுகிறார். பும்ராவின் சிறப்புத்தன்மையே அவரது யார்க்கர்கள்தான். ஒருநாள் போட்டிகளுக்கு மட்டுமல்லாது டெஸ்ட் போட்டிகளுக்கும் யார்க்கர் மிகச்சிறந்த ஆயுதம். ஏன் சொல்லுகிறேன் என்றால், நானும் வக்கார் யூனிஸும் எங்கள் காலக்கட்டத்தில் யார்க்கர்களை நிறைய பயன்படுத்தியுள்ளோம் என்றார்.

பாகிஸ்தானிலிருந்து வந்த நானும் சரி, இந்தியாவிலிருந்து வந்த பும்ராவும் சரி, நாங்களெல்லாம் டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் ஆடி உருவானவர்கள். இருபுறம் கட்டிடங்களுடன் டென்னிஸ் பந்தில் ஆடும்போது குறுக்குவாக்கில் அடிக்க முடியாது. நேராகத்தான் ஆடியாக வேண்டும் என்பதால் பவுலர்களும் நல்ல லெந்த்தில் வீசி பழக வேண்டும் என்று வாசிம் அக்ரம் தெரிவித்தார்.

இந்திய அணியின் நட்சத்திர பவுலராக திகழும் பும்ரா, சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பவுலராக திகழ்கிறார். பும்ராவின் வருகைக்கு பிறகு இந்திய அணி, மிகச்சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது. குறிப்பாக டெத் ஓவர்களை வீசுவதில் வல்லவர் பும்ரா. டெத் ஓவர்களில் அவரால் ரன்களை கட்டுப்படுத்த முடிவதற்கான காரணங்களில் ஒன்று அவரது யார்க்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!