சச்சின் - கோலி.. யார் பெஸ்ட் பேட்ஸ்மேன்..? ஸ்ரீசாந்த் அதிரடி பதில்

By karthikeyan VFirst Published Jan 19, 2019, 5:30 PM IST
Highlights

வெவ்வேறு காலக்கட்டத்தில் ஆடிய வீரர்களை ஒப்பிட முடியாது, ஒப்பிடவும் கூடாது. அது சரியாக இருக்காது. ஆனால் சச்சின் டெண்டுல்கருடன் கோலியை ஒப்பிடுவதே பரவாயில்லை எனுமளவிற்கு சில வீரர்களிடம் ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது. 
 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக வலம்வரும் விராட் கோலி, போட்டிக்கு போட்டி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள், அதிக ரன்கள் ஆகிய சாதனைகளை கோலி முறியடித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்களான கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் வரிசையில் மிகப்பெரிய ஜாம்பவனாக திகழ்கிறார் கோலி. சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடப்படும் கோலி, அவரை போலவே ரன்களை குவித்துவருகிறார். 

வெவ்வேறு காலக்கட்டத்தில் ஆடிய வீரர்களை ஒப்பிட முடியாது, ஒப்பிடவும் கூடாது. அது சரியாக இருக்காது. ஆனால் சச்சின் டெண்டுல்கருடன் கோலியை ஒப்பிடுவதே பரவாயில்லை எனுமளவிற்கு சில வீரர்களிடம் ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது. 

அது என்னவென்றால், சச்சின் - கோலி ஆகிய இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற கேள்விதான் அது. இந்த கேள்வியை எழுப்புவதே தவறு. ஏனென்றால் வாசிம் அக்ரம், மெக்ராத், முரளிதரன், ஷேன் வார்னே, வக்கார் யூனிஸ், சமிந்தா வாஸ், அக்தர், பிரெட் லீ போன்ற மிகச்சிறந்த பவுலர்களை எதிர்கொண்டு ஆடியவர் சச்சின் டெண்டுல்கர். எனவே கோலி சிறந்த வீரராக இருந்தாலும் அவரை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடுவது தவறு.

ஆனால் ஒப்பீட்டையும் கடந்து, இருவரில் யார் சிறந்தவர் எனுமளவிற்கு வந்துவிட்டது. சச்சின் - கோலி இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற கேள்விக்கு கோலி என்று ஹர்திக் பாண்டியாவும் கேஎல் ராகுலும் கருத்து தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், இதே கேள்விக்கு பதிலளித்த ஸ்ரீசாந்த், விராட் கோலி மிகச்சிறந்த வீரர். அவர் இதுவரை இந்திய அணிக்காக ஆற்றிய பங்களிப்பு மற்றும் அவர் செய்த சாதனைகள் ஆகியவற்றின் காரணமாக அவர் மீது எனக்கு நிறைய மதிப்பு இருக்கிறது. ஆனால் சச்சின் டெண்டுல்கருடன் யாரையும் ஒப்பிடவே முடியாது. சச்சினுக்கு முந்தைய மற்றும் பிந்தைய என எந்த காலக்கட்டத்தில் ஆடிய வீரர்களையும் சச்சினுடன் ஒப்பிட முடியாது என ஸ்ரீசாந்த் அதிரடியாக தெரிவித்தார். 

click me!