எப்படி ஜெயிப்பது எனக் கற்றுக்கொண்டேன்... இனி அவங்ககிட்ட அதிகம் பேசமாட்டேன்.... கோதாவில் இறங்கிய கோஹ்லி!

 
Published : May 02, 2018, 05:00 PM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
 எப்படி ஜெயிப்பது எனக் கற்றுக்கொண்டேன்... இனி அவங்ககிட்ட அதிகம் பேசமாட்டேன்.... கோதாவில் இறங்கிய கோஹ்லி!

சுருக்கம்

Virat Kohli Takes Yet Another Stunner

பந்துவீச்சாளர்களிடம் அதிக ஆலோசனை கூறுவதும், அதிகம் பேசுவதும் அவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்துகொண்டதாக, பெங்களூரு அணித் கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த மும்பை அணிக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில், பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

168 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பையின் டுமினி 23, குருணால் பாண்டயா 23 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவை என்ற நிலையில் 50 ரன்கள் எடுத்து போராடி வந்த ஹார்திக் பாண்டயா அவுட்டானார். இதன் மூலம் பெங்களூர் 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வென்றது. பெங்களூர் அணியின் உமேஷ் யாதவ், டிம் சைதி, முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர். இந்த வெற்றி கோஹ்லியை ரொம்பவே உற்ச்சகப்படுதியுள்ளது.

இந்நிலையில், வெற்றி குறித்து பெங்களூரு அணிக் கேப்டன் விராட் கோஹ்லி கூறுகையில், ‘பந்துவீச்சாளர்களிடம் அதிக ஆலோசனை கூறுவதும், அதிகம் பேசுவதும் அவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதை நான் புரிந்துகொண்டேன். அவர்களிடம் நான் உங்களுக்கு எது வருமோ அதை செய்யுங்கள் என்றேன்.

நீங்கள் உங்கள் விருப்பப்படி பீல்டர்களை நிறுத்திக் கொள்ளுங்கள், உங்கள் விருப்பப்படி திட்டமிடுங்கள், வீரர்களை உங்கள் பந்துவீச்சுக்கு ஏற்றவாறு வழிநடத்துங்கள் என்றேன்’ என தெரிவித்துள்ளார். இனி வரும் போட்டிகளிலும் நான் அதையே கடைபிடிப்பேன் என்றேன்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

சேப்பாக்கம் டூ சின்னசாமி.. தென்னிந்தியாவை மறந்ததா பிசிசிஐ?.. ரசிகர்கள் எழுப்பும் முழக்கம்!
இஷான் கிஷன் ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. முதல் SMAT பட்டத்தை வென்று ஜார்க்கண்ட் சாதனை..!