
ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் நாடுகள் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 125 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது..
தென் ஆப்பிரிக்கா, ஆஸி உள்ளிட்டவை முறையே 2 மற்றும் 3-வது இடத்தில் உள்ளன.
சர்வதேச கிரிக்கெட் குழு (ஐசிசி) நேற்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், "கடந்த 2015 - 16, 2016 - 17-ஆம் ஆண்டுகளில் டெஸ்ட் விளையாடும் நாடுகள் பெற்ற வெற்றி, தோல்விகளின் அடிப்படையில் இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் படுதோல்விக்கு பின் இந்திய டெஸ்ட் அணி குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றது.
20161-17-இல் 13 டெஸ்ட்களில் இந்திய அணி 10-ல் வென்றது. அதன்படி, தற்போது இந்தியா 125 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து 112 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 2-வது இடத்தை பிடித்துள்ளது,
106 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.
நியூஸிலாந்து 4-வது இடத்திலும், இங்கிலாந்து 5-வது இடத்திலும், இலங்கை 6-வது இடத்திலும், பாகிஸ்தான் 7-வது இடத்திலும், வங்கதேசம் 8-வது இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் 9-வது இடத்திலும், ஜிம்பாப்வே 10-வது இடத்திலும் உள்ளன.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.