நியூஸிலாந்து ஓபன் பாட்மிண்டன்: இந்திய இனைகள் 2-ஆம் சுற்றுக்கு அசத்தல் முன்னேற்றம்...

 
Published : May 02, 2018, 11:56 AM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
நியூஸிலாந்து ஓபன் பாட்மிண்டன்: இந்திய இனைகள் 2-ஆம் சுற்றுக்கு அசத்தல் முன்னேற்றம்...

சுருக்கம்

New Zealand Open Badminton India pairs advanced to 2nd round

நியூஸிலாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய இணைகள் 2-ஆம் சுற்றுக்கு முன்னேறி அசத்தி உள்ளனர்.

நியூஸிலாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது.  இந்தப் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் ரோஹன் கபூர் - குஹு கார்க் மற்றும் சிவம் சர்மா - ராம் பூர்விஷா இணை இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

முன்னதாக ரோஹன் - குஹூ இணை இஸ்ரேலின் மிஷா - சேனியா இணையுடன் மோதியது. விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில்  11-21, 21-7, 21-10 என்ற செட் கணக்கில் மிஷா - சேனியா இணையை, ரோஹன் - குஹூ இணை வீழ்த்தியது.  இதன்மூலம் இரண்டாவது சுற்றுக்கு இந்த இணை முன்னேறியது.

அதேபோன்று, சிவம் சர்மா - பூர்விஷா இணை ஆஸ்திரேலியாவின் நிக்கோலா - பிரான்சிஸ்கா இணையுடன் மோதியது. இதில், 21-19, 21-11 என்ற கணக்கில் நிக்கோலா - பிரான்சிஸ்கா இணையை, சிவம் சர்மா - பூர்விஷா இணை வீழ்த்தியது. இதன்மூலம் இந்த இணையும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

ஏனைய வீரர்களான அஜய் ஜெயராம், செளரப் வர்மா, சாய் பிரணீத், சமீர் வர்மா ஆகியோர் இன்று தங்கள் போட்டிகளில் கலக்குவதற்காக காத்திருக்கின்றனர். 
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

சேப்பாக்கம் டூ சின்னசாமி.. தென்னிந்தியாவை மறந்ததா பிசிசிஐ?.. ரசிகர்கள் எழுப்பும் முழக்கம்!
இஷான் கிஷன் ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. முதல் SMAT பட்டத்தை வென்று ஜார்க்கண்ட் சாதனை..!