தனக்கு எந்தமாதிரியான பாலியல் துன்புறுத்தல் நடந்தது என்று ஒரு மல்யுத்த வீராங்கனை தன்னிடம் அரைமணி நேரம் பேசிய ஆடியோ ஆதாரம் இருப்பதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கூறியுள்ளார்.
இந்திய மல்யுத்த வீராங்கனைகளை பயிற்சியாளர்கள் மற்றும் மல்யுத்த சம்மேளன தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் பாலியல் துன்புறுத்தல் செய்வதாக குற்றம்சாட்டி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக வினேஷ் போகத், பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், அன்ஷு மாலிக் உள்ளிட்ட 30 மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். புதன்கிழமை தொடங்கிய இந்த போராட்டம் 3வது நாளாக தொடர்ந்துவருகிறது.
பாகிஸ்தான் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்படும் பாபர் அசாம்..! உறுதிசெய்த அஃப்ரிடி
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருக்கும் பிரிஜ் பூஷன் சரண் சிங், பாஜக எம்பி ஆவார். இவர் மீதுதான் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூரை சந்தித்து பேசினர். சுமார் நான்கரை மணி நேரம் நீடித்த அந்த பேச்சுவார்த்தை பின்னிரவு ஒன்றரை மணிக்குத்தான் முடிந்தது.
அதன்பின்னர் மீண்டும் இன்று காலை 11.45 மணியிலிருந்து போராட்டம் தொடர்ந்துவருகிறது. இன்று மாலை மீண்டும் மத்திய அமைச்சர் அனுராக் தாகூருடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.
இந்த பேச்சுவார்த்தைக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய வினேஷ் போகத், இங்கிருந்து மல்யுத்த சம்மேளன அலுவலகம் 100 மீட்டரில் தான் உள்ளது. அவர் (சம்மேளன தலைவர்) ஏன் இங்கு வரவில்லை? வந்தால், நீங்கள் எந்த தவறும் செய்யவில்லையா என்று அவரிடம் நேரடியாகவே கேட்பேன். இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால், மல்யுத்த விரிப்பை ஜந்தர் மந்தரில் போட்டு பயிற்சி மேற்கொள்வோம். எங்களுக்கு வேறு வழியில்லை.
IND vs NZ: 2வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் என்னென்ன மாற்றங்கள்..? உத்தேச ஆடும் லெவன்
மல்யுத்த வீராங்கனை ஒருவர் எனக்கு ஃபோன் செய்தார். அவர் எப்படியெல்லாம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார் என்று அவர் என்னிடம் அரைமணி நேரம் பேசிய ஆடியோ என்னிடம் இருக்கிறது. அது முழுக்க முழுக்க மல்யுத்த சம்மேளன துணைத்தலைவர் பற்றியது. இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமாக அந்த வீராங்கனை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார் வினேஷ் போகத்.