IND vs NZ: 2வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் என்னென்ன மாற்றங்கள்..? உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Jan 20, 2023, 6:08 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. முதல் போட்டியில் ஷுப்மன் கில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். 

ஒருநாள் உலக கோப்பைக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவரும் நிலையில், உலக கோப்பைக்காக 15 வீரர்கள் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு அந்த வீரர்கள் சுழற்சி முறையில் களமிறக்கப்படுகின்றனர். நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

ஃபிட்டா, ட்ரிம்மா இருந்தால் தான் இந்திய அணியில் இடமா..? ஃபேஷன் ஷோவுக்கா ஆள் எடுக்குறீங்க..? கவாஸ்கர் அதகளம்

நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்படலாம். ஷர்துல் தாகூருக்கு பதிலாக ஃபாஸ்ட் பவுலர் உம்ரான் மாலிக் சேர்க்கப்படலாம். ஷர்துல் தாகூர் ஒரு ஆல்ரவுண்டர் என்றவகையில், பேட்டிங் டெப்த்தை அதிகரிக்கும் விதமாக முதல் போட்டியில் அவர் களமிறக்கப்பட்டார். அவர் 2 விக்கெட்டை வீழ்த்தியிருந்தாலும், அவரது பவுலிங்கை நியூசிலாந்து வீரர்கள் அடித்து ஆடினர். எனவே 140-150 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடிய உம்ரான் மாலிக்கை 2வது போட்டியில் ஆடவைக்க வாய்ப்புள்ளது. 

ஆபரேஷன் சக்ஸஸ்.. பேஷண்ட் டெத்..! நியூசி.,க்கு எதிரான ODI-யில் ஜெயித்த இந்திய அணிக்கு இப்படியொரு சோதனையா..?

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக்.
 

click me!