மல்யுத்த வீராங்கனைகளுக்கு பயிற்சியாளர்கள், WFI தலைவர் பாலியல் துன்புறுத்தல்! வினேஷ் போகட் குற்றச்சாட்டு

By karthikeyan VFirst Published Jan 19, 2023, 11:52 AM IST
Highlights

மல்யுத்த வீராங்கனைகளை பயிற்சியாளர்கள் மற்றும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் ஆகியோர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
 

அனைத்து துறைகளிலும் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்படுகின்றனர். பெண்களை பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாக்கவும், பாலியல் துன்புறுத்தல் செய்வதவர்களை தண்டிக்கவும் எத்தனையோ சட்டங்கள் இருந்தாலும், அவை செயல்படுத்தப்பட்டாலும் கூட, பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

சினிமா, விளையாட்டு மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் இந்த பாலியல் அத்துமீறல்கள் நடக்கின்றன. அந்தவகையில், இப்போது இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்டின் குற்றச்சாட்டு நாட்டையே பரபரப்பாக்கியுள்ளது.

IPL 2023: பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஸ்பின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் ஆர்சிபி வீரர் நியமனம்..!

காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுத்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட். இவர், இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். தேசிய மல்யுத்த கேம்ப்பில் மல்யுத்த வீராங்கனைகள் பயிற்சியாளர்களால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் மற்ற நிர்வாகிகளும் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தல் செய்வதாகவும் வினேஷ் போகட் குற்றம்சாட்டினார்.

மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக 30 மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய வினேஷ் போகட், பயிற்சியாளர்கள் மற்றும் மல்யுத்த சம்மேளன தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் வீராங்கனைகள் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.

சச்சின் டெண்டுல்கர் 100 சத சாதனையை முறியடிக்க கோலி என்ன செய்யணும்..? கவாஸ்கர் அதிரடி ஆலோசனை

இந்த போராட்டத்தில் வினேஷ் போகட், பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக், அன்ஷு மாலிக் ஆகிய வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதுமாதிரியான பாலியல் அத்துமீறல்களை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று பஜ்ரங் புனியா தெரிவித்தார்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மல்யுத்த சம்மேளன தலைவரான பிரிஜ் பூஷன் சரன் சிங், பாஜக எம்பி ஆவார்.
 

click me!