நீ கொஞ்சம் குசும்புக்காரன் தான்: ஹர்திக்கை ஏமாத்தி அவுட்டாக்கிய டாம் லாதமுக்கு பாடம் புகட்டிய இஷான் கிஷான்!

By Rsiva kumar  |  First Published Jan 18, 2023, 9:42 PM IST

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஹர்திக் பாண்டியாவை ஏமாத்தி அவுட்டாக்கிய டாம் லாதமுக்கு இந்திய விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் சரியான பாடம் புகட்டியுள்ளார்.


இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி தற்போது ஹைதராபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்தது. இதில், சுப்மன் கில் அதிகபட்சமாக 208 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.  ரோகித் சர்மா 34, விராட் கோலி 8, இஷான் கிஷான் 5, சூர்யகுமார் யாதவ் 31 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஹர்திக் பாண்டியா 28 ரன்கள் எடுத்திருந்த போது மூன்றாவது நடுவரது தவறான தீர்ப்பால் ஆட்டமிழந்து வெளியேறினார்.

சொந்த மண்ணில் சிராஜ் விளையாடுவதை நேரில் பார்த்து ரசித்த குடும்பத்தினர்!

Tap to resize

Latest Videos

கிரிக்கெட் பார்த்த ஒவ்வொருவரும் மூன்றாவது நடுவரை விமர்சித்து வருகின்றனர். அதோடு ஏமாத்தி ஹர்திக் பாண்டியாவை அவுட்டாக்கிய டாம் லாதம்மை கடுமையாக சாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி பிசிசிஐயும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் ஹர்திக் பாண்டியா அவுட்டா? இல்லையா? என்று கேட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இவ்வளவு ஏன், ஹர்திக் பாண்டியா நாட் அவுட் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி மூன்றாவது நடுவரை ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.

கிளவுஸை வச்சு ஸ்டம்பை அடித்தால் அவுட்டா? டுவிட்டரில் டிரெண்டாகும் ஹர்திக் பாண்டியா நாட் அவுட் ஹேஷ்டேக்!

இந்த நிலையில், நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதமுக்கு சரியான பாடம் புகட்டும் வகையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் இஷான் கிஷான், வேண்டுமென்றே கையில் பந்தை வைத்துக் கொண்டு ஸ்டெம்பை தட்டிவிட்டு அவுட் கேட்டுள்ளார். அப்போது டாம் லாதம் கிரீஸுக்கு உள்ளே தான் இருந்தார். அதன் பிறகு லெக் அம்பயரிடம் அவுட் கேட்டு தானாக சிரித்துக் கொண்டார்.

ஒன் மேன் ஆர்மி சுப்மன் கில் : நியூசிலாந்து பௌலர்களை வச்சு செஞ்சு இளம் வயதில் 208 ரன்கள் அடித்து சாதனை!

click me!