"இந்தியாவே தலைகுனியும்" - திமிர் பேச்சு பேசிய தான்சானிய வீரரின் வாயிலேயே போட்ட விஜேந்தர்

First Published Dec 18, 2016, 11:18 AM IST
Highlights


குத்துச்சண்டையில் தொடர்ந்து 7 ஆட்டங்களில் வெற்றி பெற்று ஆசிய பசிபிக் சூப்பர் மிடில் வெயிட் சாம்பின்ஷிப் பட்டத்தை வென்ற இந்திய வீரர் விஜேந்தர்சிங், முன்னாள் உலக சாம்பியன்தான்சான்யா நாட்டின் பிரான்சிஸ் செகாவுடன் நேற்று டெல்லியில் மோதினார்.

இந்த குத்துச்சண்ட 10 சுற்று கொண்ட போட்டியாக தொடங்கியது. தொடக்கத்தில் தடுப்பாட்ட பாணியை கடைபிடித்த விஜேந்தர்சிங் அதன் பிறகு பிரான்சிஸ் செகா மீது தனது சாமர்த்திய குத்துகளை செலுத்தினார்.

இனால்,  3வது சுற்றிலேயே பிரான்சிஸ் செகா நாக்–அவுட் செய்யப்பட்டு, தொழில்நுட்ப புள்ளி அடிப்படையில் விஜேந்தர்சிங் வெற்றி பெற்றதாக நடுவர் அறிவித்தார். 10 நிமிடத்திற்குள் ஆட்டம்முடிவுக்கு வந்தது.

தொழில்முறை குத்துச்சண்டையில் தோல்வியே சந்திக்காத 31 வயதான விஜேந்தர்சிங் இதன் மூலம் ஆசிய பசிபிக் சூப்பர் மிடில் வெயிட் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார்.

முன்னதாக பிரான்சிஸ் செகா, பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, “விஜேந்தர் சிங், ஏற்கனவே என்னை கண்டு அலண்டுபோய் இருக்கிறார். இன்று நடக்கும் போட்டியில் இந்தியா தலை குனியும்” என திமிருடன் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் 2 சுற்றில் விஜேந்தர், பிரான்சிஸ் செகா மீது 7 குத்துவிட்டார். 3வது சுற்று நடந்து கொண்டிருக்கும்போதே அவர் தனது இரண்டு கைகளையும் உயரமாக தூக்கி தனது தோல்வியை ஒப்பு கொண்டு விலகினார்.

click me!