ஆசிய பசிபிக் குத்துச் சண்டை போட்டி….இந்திய வீரர் விஜேந்தர் சிங் சாம்பியன்….

First Published Dec 18, 2016, 6:21 AM IST
Highlights


ஆசிய பசிபிக்  குத்துச் சண்டை போட்டி….இந்திய வீரர் விஜேந்தர் சிங் சாம்பியன்….

தான்சானியாவின் பிரான்சிஸ் செகாவை 'நாக்-அவுட்' முறையில் வென்று ஆசிய பசிபிக் 'சூப்பர் மிடில்வெயிட்' பட்டத்தை இந்திய வீரர் விஜேந்தர் சிங் தக்கவைத்துக் கொண்டார்.

கடந்த 2008 ,ஆம் ஆண்டு  பீஜிங்கில் நடைபெற்ற  ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற  இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். இவர்  தற்போது தொழில்ரீதியிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். 
இந்நிலையில் டில்லியில் நடைபெற்ற ஆசிய பசிபிக் 'சூப்பர் மிடில்வெயிட்'  சாம்பியன் போட்டிகளில்  'நடப்பு சாம்பியன்' இந்தியாவின் விஜேந்தர் சிங், தான்சானியாவின் பிரான்சிஸ் செகாவை எதிர்கொண்டார்.

தலா 3 நிமிடம் வீதம், மொத்தம் 10 சுற்றுகள் போட்டி நடப்பதாக இருந்தது. தொடக்கத்தில் செகா ஆக்ரோஷம் காட்டினார். விஜேந்தர் தற்காப்பில் கவனம் செலுத்தினாலும், துல்லியமாக 'பன்ச்' செய்தார்.

முதலிரண்டு சுற்று முடிவில் விஜேந்தர் 7 குத்து விட்டிருந்தார். மூன்றாவது சுற்று நடந்து கொண்டிருக்கும்போது, செகா தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.

இதனால், விஜேந்தர் சிங் 'நாக்-அவுட்' முறையில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார் அறிவிக்கப்பட்டார். இதன் மூலம், தொடர்ந்து 8வது போட்டியில் விஜேந்தர் சிங், வெற்றி பெற்றார்.

 

click me!