
உலக சூப்பர் சீரிஸ் பைனல் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அவர் தனது 3-ஆவது ஆட்டத்தில் ஸ்பெயினின் கரோலினா மரினை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தார்.
துபையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் இரு ஆட்டங்களில் ஒரு வெற்றி, தோல்வியை பதிவு செய்திருந்த சிந்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற 3-ஆவது லீக் ஆட்டத்தில் கரோலினா மரினை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய சிந்து, ஆரம்பம் முதலே அபாரமாக ஆடினார். முதல் செட்டை 21-17 என்ற கணக்கில் கைப்பற்றிய சிந்து, அடுத்த செட்டை 21-13 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி கண்டார்.
46 நிமிடங்களில் இந்த ஆட்டத்தை முடித்த சிந்து, ரியோ ஒலிம்பிக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கரோலினா மரினிடம் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.