
உலக குத்துச்சண்டை அமைப்பின் (டபிள்யுபிஒ), ஆசிய பசிபிக் சூப்பர் மிடில்வெயிட் பட்டத்துக்கான குத்துச்சண்டைப் போட்டியில் நடப்புச் சாம்பியனான இந்தியாவின் விஜேந்தர் சிங், தான்சானியாவின் பிரான்சிஸ் செக்காவை இன்று எதிர்கொள்கிறார்.
76 கிலோ எடைப் பிரிவிலான இந்தப் போட்டியில் மொத்தம் 10 சுற்றுகள் நடைபெறவுள்ளன.
விஜேந்தர் சிங்கைப் பொருத்த வரையில், தொழில்முறை குத்துச்சண்டையில் அவர் பங்கேற்ற 7 போட்டிகளிலுமே வெற்றி கண்டுள்ளார். அதில் 6 போட்டிகளில் நாக் அவுட் முறையில் வென்றுள்ளது நினைவுகூரத்தக்கது.
மறுமுனையில், முன்னாள் உலக சாம்பியனான பிரான்சிஸ் இதுவரை பங்கேற்ற 43 போட்டிகளில் 32-இல் வெற்றி பெற்றுள்ளார். அதில் 17 வெற்றிகள் நாக் அவுட் முறையிலானது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.