
முதல் நாள் ஆட்டம் முடிந்த பிறகு இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கூறியதாவது:
மொயீன் அலி மிக அற்புதமாக விளையாடியதாக நினைத்துப் பார்க்கிறேன். அவர் மிகக் கடினமான தருணத்தில்தான் பேட் செய்வதற்காக களமிறங்கினார். நாங்கள் இரு விக்கெட்டுகளை இழந்து தவித்த நேரத்தில் மொயீன் அலி முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதேபோன்றுதான் இந்த ஆண்டு முழுவதும் அவர் விளையாடியிருக்கிறார்.
முதல் நாளைப் போன்றே 2-ஆவது நாளிலும் அவர் சிறப்பாக ஆடுவார் என்று நம்புகிறேன். அப்படி விளையாடும்பட்சத்தில் இந்திய பெளலர்கள் நெருக்கடிக்குள்ளாவதோடு, மொயீன் அலிக்கு பந்துவீச சிரமப்படுவார்கள். 2-ஆவது நாளிலும் எங்கள் அணி சிறப்பாக ஆடும்பட்சத்தில் வலுவான ஸ்கோரை குவிக்க முடியும். அதன்மூலம் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என நம்புகிறேன் என்றார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.