கடன் வாங்கி மகன் கேட்டதை செய்த தாய்… பெருமையை தேடி தந்த விக்னேஷ்... யார் இவர்?

By Narendran SFirst Published Aug 22, 2022, 6:35 PM IST
Highlights

இந்தியாவில் முதல்முறையாக நடத்தப்பட்டு வரும் அல்டிமேட் கோ கோ லீக் போட்டியில் பெட்டிக்கடை வைத்திருக்கு தாயின் மகன் சிறப்பாக செயல்பட்டு தனது தாய்க்கு பெருமை சேர்த்துள்ளார். 

இந்தியாவில் முதல்முறையாக நடத்தப்பட்டு வரும் அல்டிமேட் கோ கோ லீக் போட்டியில் பெட்டிக்கடை வைத்திருக்கு தாயின் மகன் சிறப்பாக செயல்பட்டு தனது தாய்க்கு பெருமை சேர்த்துள்ளார். ஐபிஎல், புரோ கபாடி லீக் போன்ற லீக் போட்டிகள் இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இந்தியாவில் முதல் முறையாக அல்டிமேட் கோ கோ (Ultimate Kho Kho) எனும் லீக் போட்டி கோ கோ ஃபெடரேஷன் ஆஃப் இந்தியாவால் நடத்தப்பட்டு வருகிறது. 6 அணிகள் பங்கேற்றுள்ள இந்த லீக் போட்டியின் முதல் சீசன் கடந்த 14 ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், வரும் செப்.22 ஆம் தேதியுடன் போட்டிகள் நிறைவு பெறுகிறது. இதில் மும்பை கிலாடிஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், ராஜஸ்தான் வாரியர்ஸ், ஒடிசா ஜக்கர்நாட்ஸ் மற்றும் தெலுங்கு யோதாஸ் ஆகிய 5 அணிகளுடன் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையை மையமாகக் கொண்டு சென்னை குயிக் கன்ஸ் அணி உருவாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கடைசி ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வென்றது நியூசிலாந்து

இந்த அணியில் அமித் பாட்டீல், மகேஷ் ஷிண்டே, ராஜ்வர்தன் பாட்டீல், எம் விக்னேஷ், ராம்ஜி காஷ்யப், பட்டா நர்சயா, எஸ் சந்த்ரு, சிபின் எம், மனோஜ் பாட்டீல், தாசரி ராவ், வி கபிலன், மதன், பி ஜெய் பிரசாத், பி ஆனந்த் குமார், புச்சனகரி ராஜு, விஜய் வேகத், சச்சின் கவுர், ப்ரீதம் சௌகுலே, பல்வீர் சிங், கட்லா மோகன், வெனிகோபால் எஸ், நீலகண்டம் சுரேஷ், ஜஸ்வந்த் சிங், விக்னேஷ் எம் உள்ளிட்ட வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். சென்னை குயிக் கன்ஸ் அணி முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வியைத் தழுவினாலும், 17 ஆம் தேதி தெலுங்கு யோதாஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 53 - 46 என்கிற புள்ளிகணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

இதையும் படிங்க: தோனியா சச்சினா..? ருதுராஜ் கெய்க்வாட்டின் சாமர்த்தியமான பதில்

அதன்பிறகு, நேற்று மும்பை கிலாடிஸ் அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் 65 - 45 என்ற புள்ளிகணக்கில் 2 ஆவது வெற்றியைப் பதிவு செய்தது. இதில் சென்னையில் அணியில் விளையாடும் பாண்டிச்சேரி வீரரான விக்னேஷ் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை காலமாகிவிட்டார். அவரது தயார் சாலை பெட்டிக்கடை வைத்திருக்கிறார். விக்னேஷ் மாநில, தேசிய அளவிலான போட்டிகளுக்கு செல்லும் போதெல்லாம், கடன் வாங்கியாவது அவருக்கான செலவு பணத்தை அவரது தாய் கொடுத்துவந்துள்ளார். இந்த நிலையில் விக்னேஷ் அல்டிமேட் கோ கோ லீக் போட்டியில் சிறப்பாக விளையாடி தனது தாயின் கனவை நிறைவேற்றியுள்ளார். மேலும் தாயின் நம்பிக்கையையும் அவர் காப்பாற்றியுள்ளார். 

click me!