தோனியா சச்சினா என்ற கேள்விக்கு ருதுராஜ் கெய்க்வாட் சாமர்த்தியமாக பதிலளித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் திறமையான பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட். ஐபிஎல் மற்றும் உள்நாட்டு போட்டிகளில் அபாரமாக விளையாடி நன்றாக ஸ்கோர் செய்து இந்திய அணியில் இடம்பிடித்தார்.
இந்திய அணிக்காக 9 டி20 போட்டிகளில் ஆடி 135 ரன்கள் அடித்துள்ளார். ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தாலும் ஆடும் லெவனில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
இதையும் படிங்க - ODI-ல் முதல் சதமடித்த ஷுப்மன் கில்! கடைசி போட்டியில் ஜிம்பாப்வேவுக்கு கடின இலக்கை நிர்ணயித்த இந்தியா
ஆனால் எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களில் ஒருவராக சர்வதேச அளவில் ஜொலிப்பார் என்பதில் சந்தேகமில்லை.
இந்நிலையில், அவரது பேட்டியை பிசிசிஐ டுவிட்டரில் பகிர்ந்துள்ளது. அதில் பல்வேறு கேள்விகளுக்கு ருதுராஜ் பதிலளித்தார். புனேவில் எந்த உணவு சாப்பிட பிடிக்கும் என்ற கேள்விக்கு தோசை என்று பதிலளித்தார். ரஃபேல் நடால் - நோவாக் ஜோகோவிச் இருவரில் யார் என்ற கேள்விக்கு ரோஜர் ஃபெடரர் என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க - ஆசிய கோப்பையிலிருந்து விலகிய பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடிக்கு மாற்று வீரர் அறிவிப்பு
அந்தவரிசையில் தோனியா - சச்சினா என்று கேட்கப்பட்டது. இந்திய கிரிக்கெட்டின் இருபெரும் துருவங்களும் ஜாம்பவான்களுமான இவர்கள் இருவரில் ஒருவரை தேர்வு செய்வது மிகக்கடினம். இருவரும் இந்திய கிரிக்கெட்டுக்கு அரும்பெரும் பங்காற்றியவர்கள். அந்தவகையில், இந்த கடினமான கேள்விக்கு சில நொடிகள் யோசித்த ருதுராஜ் கெய்க்வாட், முதலில் தோனியுடன் பயிற்சி செசனை முடித்துவிட்டு பின்னர் சச்சினுடன் டின்னர் சாப்பிடுவேன் என்று சாமர்த்தியமாக பதிலளித்தார்.
Inspirations 👍
Favourite meal 😋
Best batting partner 👌
A round of Quick Answers with as he shares this & more! ⚡ ⚡ | pic.twitter.com/Xu6SNmFR2H
ஐபிஎல்லில் தோனி கேப்டன்சியில் சிஎஸ்கே அணியில் வளர்ந்தவர் ருதுராஜ் கெய்க்வாட்.ஐபிஎல் 2021ல் அதிக ரன்களை குவித்து அசத்தினார். அந்த சீசனில் சிஎஸ்கே அணி 4வது முறையாக கோபையை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தவர் ருதுராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியிருக்கையில், தோனியை விட்டுக்கொடுக்க முடியாது. சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட்டின் அடையாளம். அதனால் அவரையும் விட்டுக்கொடுக்க முடியாது என்ற சூழலில் சாமர்த்தியமாக பதிலளித்தார் ருதுராஜ்.