WI vs NZ: கடைசி ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வென்றது நியூசிலாந்து

By karthikeyan VFirst Published Aug 22, 2022, 5:59 PM IST
Highlights

கடைசி ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-1  என ஒருநாள் தொடரை வென்றது நியூசிலாந்து அணி.
 

நியூசிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது.  டி20 தொடரை வென்ற 2-1 என வென்ற நியூசிலாந்து அணி, ஒருநாள் தொடரையும் வென்றது. 

3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதால் 1-1 என தொடர் சமனடைந்திருந்தது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையும் படிங்க - தோனியா சச்சினா..? ருதுராஜ் கெய்க்வாட்டின் சாமர்த்தியமான பதில்

முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் டாப் 3 வீரர்களும் அபாரமாக பேட்டிங் ஆடினர். தொடக்க வீரர் ஷேய் ஹோப் அரைசதம் அடித்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் மற்றும் 3ம் வரிசையில் இறங்கிய கேப்டன் பூரனும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடினர். அபாரமாக ஆடிய கைல் மேயர்ஸ் சதமடித்தார். ஆனால் பூரன் 91 ரன்னில் ஆட்டமிழந்து 9 ரன்னில் சதத்தை தவறவிட்டார். கைல் மேயர்ஸ் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

டாப் 3 பேட்ஸ்மேன்களை தவிர மற்ற அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 50 ஓவரில் 301 ரன்கள் அடித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

இதையும் படிங்க - ஆசிய கோப்பையிலிருந்து விலகிய பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடிக்கு மாற்று வீரர் அறிவிப்பு

இதையடுத்து 302 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் ஃபின் ஆலனை தவிர பேட்டிங் ஆடிய அனைத்து பேட்ஸ்மேன்களும் அபாரமாக பேட்டிங் ஆடினர். தொடக்க வீரர் கப்டில்(57), டெவான் கான்வே (56), கேப்டன் டாம்லேதம் (69), டேரைல் மிட்செல் (63) ஆகிய நால்வரும் அரைசதம் அடிக்க, ஜிம்மி நீஷம் 11பந்தில் 4சிக்ஸர்களுடன் 34 ரன்கள் அடிக்க, 48வது ஓவரிலேயே இலக்கை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 2-1 என ஒருநாள் தொடரை வென்றது.
 

click me!