யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட்: நியூகினியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அசத்தல்...

 
Published : Jan 17, 2018, 11:19 AM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட்: நியூகினியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அசத்தல்...

சுருக்கம்

U-19 Cricket World Cup Newkinaya defeat by India by 10 wickets

யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள பப்புவா நியூகினியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அசத்தியுள்ளது.

யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் 'பி' பிரிவு ஆட்டம் நியூஸிலாந்தின் பே ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றத.

குரூப் சுற்று ஆட்டத்தில் பப்புவா நியூ கினியா அணியை இந்தியா எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

பப்புவா அணி 21.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 64 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து, 65 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்தியா, 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 67 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.  கேப்டன் பிருத்வி ஷா 57 ஓட்டங்களும், மன்ஜோத் கல்ரா 9 ஓட்டங்களும் எடுத்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான குரூப் பிரிவு முதல் ஆட்டத்தில் 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அபாரா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

குரூப் பிரிவில் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்ற இந்தியா, காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

குரூப் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள மற்றொரு அணியான ஜிம்பாப்வே உடன் வரும் வெள்ளிக்கிழமை இந்தியா விளையாடுகிறது என்பது கூடுதல் தகவல்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஓவராக குடித்து மட்டையான இங்கிலாந்து வீரர்கள்! ஆஷஸ் தோல்விக்கு காரணம் இப்பதான் புரியுது!
20 வயதில் டி20 உலகக்கோப்பை வெற்றி; அதுவே தொடர் வெற்றிக்கு நம்பிக்கை தந்தது: ரோஹித் சர்மா