ஹாக்கி போட்டி: இந்தியா - ஜப்பான் இன்று நியூஸிலாந்தில் மோதல்; வெல்லுமா இந்தியா?

 
Published : Jan 17, 2018, 10:59 AM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
ஹாக்கி போட்டி: இந்தியா - ஜப்பான் இன்று நியூஸிலாந்தில் மோதல்; வெல்லுமா இந்தியா?

சுருக்கம்

Hockey Match India - Japan Confrontation Today Will you be India

நான்கு நாடுகள் மட்டும் பங்கேற்கும் ஹாக்கி போட்டியில் இந்தியா - ஜப்பான் ஆடவர் ஹாக்கி அணிகள் இன்று மோதுகின்றன.

நான்கு நாடுகள் மட்டும் பங்கேற்கும் ஹாக்கி போட்டியில் நியூஸிலாந்தில் நடைபெறவுள்ளது. இரண்டு 5 நாள் தொடர்களில் பங்கேற்பதற்காக இந்திய அணி நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

நியூஸிலாந்து, இந்தியா, பெல்ஜியம், ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்கும் இந்தப் போட்டியின் தொடக்க நாளான இன்று ஜப்பான் அணியை இந்தியா எதிர்கொள்கிறது. நாளை பெல்ஜியம் அணியையும், சனிக்கிழமை நியூஸிலாந்தையும் எதிர்கொள்கிறது இந்தியா.

மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி இந்த ஆண்டில் எதிர்கொள்ள உள்ள முதல் போட்டி இதுவாகும்.

இதுகுறித்து நியூஸிலாந்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்தியாவின் ரூபிந்தர் பால் சிங், "நியூஸிலாந்தில் பயிற்சி மேற்கொண்டோம். நல்ல தொடக்கத்தை ஏற்படுத்துவோம் என்று நம்புகிறேன். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் ஜப்பான் அணியை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருக்கிறோம். அதுபோல், இந்த ஆட்டத்திலும் வெற்றி பெறுவோம்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஓவராக குடித்து மட்டையான இங்கிலாந்து வீரர்கள்! ஆஷஸ் தோல்விக்கு காரணம் இப்பதான் புரியுது!
20 வயதில் டி20 உலகக்கோப்பை வெற்றி; அதுவே தொடர் வெற்றிக்கு நம்பிக்கை தந்தது: ரோஹித் சர்மா