
தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய 287 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தனது 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.
நேற்று நடைபெற்ற நான்காவது நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 91.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 258 ஓட்டங்கள் எடுத்தது. இன்னும் ஒரு நாள் எஞ்சியிருக்கும் நிலையில், அந்த இலக்கை எட்ட இந்திய அணி போராடி வருகிறது.
நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில், 23 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 35 ஓட்டங்கள் எடுத்துள்ளது. கேப்டன் விராட் கோலியின் அதிரடி சதத்துடன் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 92.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ஓட்டங்கள் எடுத்தது.
28 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி மூன்றாவது நாள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 90 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மார்க்ரம், ஆம்லா ஆகியோர் தலா 1 ரன்னுடன் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து களம் இறங்கிய ஏபி டி வில்லியர்ஸ் அரை சதத்துடனும், எல்கர் 78 பந்துகளில் 36 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் நான்காவது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. தென் ஆப்பிரிக்கா அணி 144 ஓட்டங்களை எட்டியிருந்தபோது முகமது சமியின் பந்துவீச்சில் டி வில்லியர்ஸ் 80 ரன்களில் விக்கெட் கீப்பர் பார்திவ் படேலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து, டீன் எல்கரும் 61 ஓட்டங்களில் சமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் நிதானமாக விளையாட, மறுமறும் குவிண்டன் டி காக், சமி பந்துவீச்சில் நடையைக் கட்டினார்.
பிலாண்டர் 85 பந்துகளில் 26 ஓட்டங்கள், கேசவ் மஹராஜ் 6 ஓட்டங்கள், ரபாடா 4 ஓட்டங்கள், பிளெஸ்ஸிஸ் 141 பந்துகளில் 48 ஓட்டங்கள், எல்.கிடி 1 ஓட்டம் எடுத்து ஆட்டமிழந்தனர்.
மோர்னே மோர்கெல் மட்டும் ஆட்டமிழக்காமல் 10 ஓட்டங்களுடன் இருந்தார். இவ்வாறாக அந்த அணி 91.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 258 ஓட்டங்கள் சேர்த்தது.
அதிகபட்சமாக முகமது சமி 4 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரீத் பும்ரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இரண்டாவது இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற 28 ஓட்டங்களுடன் சேர்த்து இந்திய அணிக்கு 287 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளத் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.