ஆஸ்திரேலிய கேப்டனின் தரம்தாழ்ந்த ஸ்லெட்ஜிங்!! நீங்க பண்ணதுக்கு பேரு ஸ்லெட்ஜிங் இல்ல பெய்ன்.. அதையே ரிவர்ஸா கேட்டா என்ன பண்ணுவீங்க

By karthikeyan VFirst Published Dec 29, 2018, 11:11 AM IST
Highlights

ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட்டை ஸ்லெட்ஜிங் செய்வதாக நினைத்து சம்மந்தமே இல்லாமல் பேசியுள்ளார். 
 

ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட்டை ஸ்லெட்ஜிங் செய்வதாக நினைத்து சம்மந்தமே இல்லாமல் பேசியுள்ளார். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்துவருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, புஜாராவின் சதம் மற்றும் மயன்க், கோலி, ரோஹித் சர்மாவின் அரைசதங்களால் முதல் இன்னிங்ஸில் 443 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் ஆர்டர் பும்ராவின் வேகத்தில் சரிந்தது. பும்ராவின் வேகத்தை சமாளிக்க முடியாத ஆஸ்திரேலிய அணி, அவரிடம் மட்டுமே 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 67 ஓவர்கள் மட்டுமே ஆடி 151 ரன்களுக்கே முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட்டானது. 

292 ரன்கள் முன்னிலை என்ற வலுவான நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸிற்கு எதிர்மாறாக பேட்டிங் ஆடியது. விஹாரி 13 ரன்களில் வெளியேற, புஜாரா மற்றும் கோலி டக் அவுட்டாகினர். ரஹானே(1), ரோஹித்(5) ஆகியோரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்திருந்தது. 

நான்காம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கியதும் மயன்க், ஜடேஜா, பண்ட் ஆகியோர் ஆட்டமிழக்க, 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி டிக்ளேர் செய்தது. 

399 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி, 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. 

இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களுமே மாறி மாறி ஸ்லெட்ஜிங் செய்துவருகின்றனர். ஆஸ்திரேலிய அணிக்கு சற்றும் சளைக்காமல் இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்துவருகின்றனர். சொல்லப்போனால் ஸ்லெட்ஜிங்கிற்கே பெயர்போன ஆஸ்திரேலிய வீரர்களை விட இந்திய அணியினர் பயங்கரமாக ஸ்லெட்ஜிங் செய்துவருகின்றனர். 

மிட்செல் ஜான்சன் உள்ளிட்ட முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள், பேட்ஸ்மேன்களை வம்பு இழுத்து அவர்களை சீண்டிவிட்டு அதற்கான நேர்மறையான விளைவுகளை அறுவடை செய்வர். ஆனால் தற்போதைய ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்ய வேண்டும் என்பதற்காக எதை எதையோ செய்கின்றனர். அதுவும் என்ன பேசுகிறோம்? இதை பேசினால் எதிரணி வீரர்கள் தூண்டப்படுவார்களா? என்பதை எல்லாம் யோசிக்காமல் என்னென்னவோ பேசுகின்றனர். 

அப்படித்தான் பேசியுள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன். மெல்போர்ன் டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தபோது, ரிஷப் ஒருநாள் அணியில் புறக்கணிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, தோனி ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார். நீ கழட்டிவிடப்பட்டாய். எனவே உனக்கு வேற வேலையில்லை என்றால் பிக் பேஷ் டி20 லீக் போட்டிகளில் வந்து ஆடு என்று சீண்டினார். அத்துடன் நிறுத்தாமல் நானும் என் மனைவியும் திரைப்படத்திற்கு செல்கிறோம். என் குழந்தைகளை பார்த்துக்குறியா? என்று ஸ்லெட்ஜிங் செய்வதாக நினைத்து பேசியுள்ளார்.

இதெல்லாம் ஒரு ஸ்லெட்ஜிங்கே கிடையாது. என்ன பேசுவது என்பதே தெரியாமல் எதையாவது பேச வேண்டும் என்பதற்காக பேசியது போல் உள்ளது. ஆனால் டிம் பெய்னின் வார்த்தைகளால் ரிஷப் பண்ட் தூண்டப்படவே கிடையாது என்பதுதான் உண்மை. அவர் தொடர்ந்து நிதானமாகத்தான் இருந்தார். 

ஆனால் டிம் பெய்ன் பேசியது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. டிம் பெய்னுக்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்துவருகின்றனர். நீ(டிம் பெய்ன்) உன் குழந்தையை கூட்டிக்கொண்டு படத்துக்கு போ... உன் மனைவியை வேண்டுமானால் ரிஷப் பண்ட் பார்த்துக்கொள்ளட்டும் என்ற ரீதியாக கடுமையாக பதிலடிகளை கொடுத்து வருகின்றனர் ரசிகர்கள்.

ஸ்லெட்ஜிங்கிற்கு பெயர்போன ஆஸ்திரேலிய அணியின் கேப்டன், என்ன பேசுவதென்றே தெரியாமல் ஸ்லெட்ஜிங் செய்வதாக நினைத்து இப்படி பேசியது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. 
 

click me!