இன்றைய நாளின் சிறந்த பந்து.. போட்டது நான் தான்.. ஆனால் போட சொன்னது அவரு!! ரகசியத்தை உடைத்த பும்ரா

By karthikeyan VFirst Published Dec 28, 2018, 6:40 PM IST
Highlights

வீசும் ஒவ்வொரு பந்திலுமே வெரைட்டி காட்டும் பும்ரா, ஷான் மார்ஷுக்கு வீசிய துல்லியமான ஸ்லோ யார்க்கர் உச்சகட்ட மிரட்டல். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸை 443 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி வெறும் 151 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இதையடுத்து 292 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்துள்ளது. 

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியை தனது வேகத்தில் திக்கு முக்காட வைத்து சரித்தார் பும்ரா. மார்கஸ் ஹாரிஸ், ஷான் மார்ஷ், டிராவிஸ் ஹெட், டிம் பெய்ன், நாதன் லயன், ஹேசில்வுட் ஆகிய 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ராவின் அபாரமான பந்துவீச்சில் விக்கெட்டுகளை மளமளவென இழந்த ஆஸ்திரேலிய அணி 151 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 

வீசும் ஒவ்வொரு பந்திலுமே வெரைட்டி காட்டும் பும்ரா, ஷான் மார்ஷுக்கு வீசிய துல்லியமான ஸ்லோ யார்க்கர் உச்சகட்ட மிரட்டல். அந்த பந்தில் அவுட்டானதும் அதிர்ந்துபோன ஷான் மார்ஷ் சில நொடிகள் திகைத்துப்போய் நின்றார். பும்ராவின் அந்த பந்துதான் இன்றைய நாளின் ஹாட் டாக்.

அப்படிப்பட்ட அந்த பந்தை வீசுவதற்கான ஐடியா கொடுத்தது யார் என்று பும்ரா பகிர்ந்துள்ளார். மூன்றாம் நாள் ஆட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய பும்ரா, ஆடுகளத்தில் எந்தவிதமான தன்மையும் இல்லாததால் பவுலிங் சுத்தமாக எடுபடவில்லை. அந்த நேரத்தில் ஷான் மார்ஷுக்கு ஸ்லோ டெலிவரி ஒன்று போடுமாறு ரோஹித் சர்மா தான் என்னிடம் கூறினார். ரோஹித்தின் ஆலோசனையின்படிதான் ஷான் மார்ஷுக்கு ஸ்லோ யார்க்கர் போட்டேன் என்று பும்ரா தெரிவித்துள்ளர். 

ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸில் முதல் 3 விக்கெட்டுகள் விழுந்துவிட்ட நிலையில், நான்காவது விக்கெட்டுக்கு ஷான் மார்ஷும் டிராவிஸ் ஹெட்டும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிவந்தனர். உணவு இடைவேளை விடுவதற்கு முந்தைய ஓவரின் கடைசி பந்தில் துல்லியமான ஸ்லோ யார்க்கரின் மூலம் ஷான் மார்ஷை வீழ்த்தினார் பும்ரா. 
 

click me!