பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரின் பதக்கப் பட்டியலில் கடைசியாக சீனாவை பின்னுக்கு தள்ளிய அமெரிக்கா 40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம் என்று மொத்தமாக 126 பதக்கங்களுடன் நம்பர் 1 இடம் பிடித்து ஒலிம்பிக் தொடரை நிறைவு செய்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் கடந்த ஜூலை மாதம் 26 ஆம் தேதி தொடக்க விழா நிகழ்ச்சியுடன் பிரம்மாண்டமாக தொடங்கியது. இதைத் தொடர்ந்து 27ஆம் தேதி முதல் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், ஆரம்பம் முதலே தங்கம், வெள்ளி, வெண்கலம் என்று சீனா மற்றும் அமெரிக்கா பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்து வந்தன.
ஒரு கட்டத்தில் ஒட்டு ஒத்தமாக 100 பதக்கங்களை கடந்து அமெரிக்கா சாதனை படைத்தது. கடைசியாக சீனா 40 தங்கப் பதக்கங்களை கைப்பற்றி நம்பர் 1 இடத்தில் இருந்த நிலையில், கடைசி நாளான நடைபெற்ற போட்டிகளில் அமெரிக்கா வெற்றி பெற்று தங்கப் பதக்கங்கள் கைப்பற்றவே பதக்கப் பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்தது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 தொடரின் முடிவில் அமெரிக்கா 40 தங்கப் பதக்கம், 44 வெள்ளிப் பதக்கம் மற்றும் 42 வெண்கலப் பதக்கம் என்று மொத்தமாக 126 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் அமெரிக்கா 39 தங்கப் பதக்கம், 41 வெள்ளி மற்றும் 33 வெண்கலப் பதக்கம் என்று மொத்தமாக 113 பதக்கங்களை கைப்பற்றி முதலிடம் பிடித்திருந்தது.
இதே போன்று சீனா, டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் 38 தங்கம், 32 வெள்ளி மற்றும் 19 வெண்கலம் என்று மொத்தமாக 89 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் 2ஆவது இடம் பிடித்திருந்தது. ஆனால், தற்போது பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில் 40 தங்கம், 27 வெள்ளி மற்றும் 24 வெண்கலம் என்று மொத்தமாக 91 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் 2ஆவது இடம் பிடித்துள்ளது.
இந்தியா ஒரு தங்கம் கூட இல்லாமல் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில் 71ஆவது இடம் பிடித்து இந்த தொடரை முடித்துள்ளது. ஆனால், கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கம் என்று 7 பதக்கங்களுடன் 48ஆவது இடத்தில் இருந்தது.
இதுவரையில் இந்தியா ஒலிம்பிக் தொடரில் பங்கேற்று மொத்தமாக 41 பதக்கங்களை குவித்துள்ளது. ஒலிம்பிக் தொடரில் அதிகபட்சமாக ஹாக்கி 8 தங்கபம், ஒரு வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. மேலும், மல்யுத்த போட்டியிலும் இந்தியா 2 வெள்ளி மற்றும் 8 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. சிறந்த ஒலிம்பிக் தொடராக கடந்த 2020ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் அமைந்துள்ளது.
அமெரிக்கா, சீனா தவிர ஜப்பான் 20 தங்கம், 12 வெள்ளி மற்றும் 13 வெண்கலப் பதக்கம் என்று மொத்தமாக 45 பதக்கங்களை வென்று 3ஆவது இடம் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 53 பதக்கங்களுடன் (18 தங்கம், 19 வெள்ளி, 16 வெண்கலம்) என்று மொத்தமாக 53 பதக்கங்களுடன் 4ஆவது இடம் பிடித்துள்ளது. இதே போன்று பிரான்ஸ் (16 தங்கம், 26 வெள்ளி, 22 வெண்கலம்), நெதர்லாந்து (15 தங்கம், 7 வெள்ளி, 12 வெண்கலம்), இங்கிலாந்து (14 தங்கம், 22 வெள்ளி, 29 வெண்கலம்), கொரியா (13 தங்கம், 9 வெள்ளி, 10 வெண்கலம்), இத்தாலி (12 தங்கம், 13 வெள்ளி, 15 வெண்கலம்), ஜெர்மனி (12 தங்கம், 13 வெள்ளி, 8 வெண்கலம்) என்று பதக்கப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
நீரஜ் சோப்ராவின் பயிற்சிக்கு ரூ.5.72 கோடி செலவு செய்த விளையாட்டு அமைச்சகம்!
பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் 100 பதக்கங்களுக்கு மேல் வென்ற ஒரு நாடாக அமெரிக்கா சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமின்றி தொடர்ந்து 4ஆவது முறையாக பதக்கப் பட்டியலில் சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்து வருகிறது. ஒலிம்பிக் தொடரை நடத்திய பிரான்ஸ் 5ஆவது இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.