வரலாற்றில் முதல் முறை – தங்கப் பதக்கம் வென்ற ஒலிம்பிக் வீரர் அர்ஷத் நதீமிற்கு ராணுவம், போலீஸ் பாதுகாப்பு!

By Rsiva kumarFirst Published Aug 11, 2024, 4:37 PM IST
Highlights

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் 92.97மீ தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்று நள்ளிரவு நடைபெறும் நிறைவு விழாவுடன் முடிவடைகிறது. தற்போது வரையில் சீனா 39 தங்கம், 27 வெள்ளி மற்றும் 24 வெண்கலப் பதக்கம் என்று மொத்தமாக 90 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. அமெரிக்கா 38 தங்கம், 42 வெள்ளி மற்றும் 42 வெண்கலப் பதக்கம் என்று மொத்தமாக 122 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது.

அர்ஷாத் நதீம் 92.97, புதிய ஒலிம்பிக் சாதனை, நீரஜ் சோப்ரா 89.45மீ தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை!

Latest Videos

இந்த தொடரில் இந்தியா பங்கேற்ற 16 விளையாட்டு போட்டிகளில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 3 வெண்கலப் பதக்கம், ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம், தடகளப் போட்டியில் ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் மல்யுத்த போட்டியில் ஒரு வெண்கலப் பதக்கம் என்று மொத்தமாக 6 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் 69ஆவது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் தான் நீரஜ் சோப்ரா போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97மீ தூரம் எறிந்து வரலாற்று சாதனை படைத்தார். முதல் முயற்சியிலேயே 92.97மீ தூரம் எறிந்து இந்த ஒலிம்பிக் தொடரில் அதிக தூரம் எறிந்த வீரராக புதிய சாதனையை படைத்தார். அதோடு, 90 மீட்டருக்கும் அதிகமாக எறிந்த 6ஆவது வீரராக சாதனையை நிகழ்த்தினார்.

நீரஜ் சோப்ராவின் பயிற்சிக்கு ரூ.5.72 கோடி செலவு செய்த விளையாட்டு அமைச்சகம்!

இந்த தொடரில் அர்ஷாத் நதீம் தங்கப் பதக்கம் வென்றதன் மூலமாக ஒலிம்பிக் தொடரில் பாகிஸ்தான் முதல் பதக்கத்தை வென்றது. அதுமட்டுமின்றி தனது நாட்டிற்காக பதக்கம் வென்று கொடுத்த முதல் வீரர் என்ற சாதனையை அர்ஷாத் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக பாகிஸ்தான் 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் ஹாக்கி போட்டியில் முதல் முறையாக வெண்கலப் பதக்கம் வென்றது.

இதுவரையில் பாகிஸ்தான் ஒட்டு மொத்தமாக ஒலிம்பிக் தொடரில் மட்டும் 10 பதக்கங்களை குவித்துள்ளது. இதில், 3 தங்கம், 3 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கம் அடங்கும். ஒட்டுமொத்தமாக, பாகிஸ்தானுக்கு மல்யுத்தம் மற்றும் குத்துச்சண்டையில் 2 தனிப்பட்ட பதக்கங்கள் மட்டுமே உள்ளன. முகமது பஷீர் 1960 இல் வெண்கலப் பதக்கத்தை வென்றார். ஹுசைன் ஷா 1988 சியோல் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வயநாடு மக்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்த இளம் கிராண்ட் செஸ் மாஸ்டர் டி குகேஷ்!

இந்த நிலையில் தான் நாட்டிற்கு தங்கப் பதக்கம் வென்று கொடுத்த பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் ராணுவம் மற்றும் காவல் துறை அதிகாரிகளும் நதீமுக்கு பாதுகாப்பு அளித்தனர். அதோடு திறந்தவெளி பேருந்தில் ஊர்வலமாக சென்றார்.

இதற்கு முன்னதாக இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை வென்ற நிலையில் இது போன்று வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 32 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அர்ஷத் நதீமிற்கு இப்பொடியொரு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. லாகூர் விமான சென்றடைந்த அர்ஷத் நதீம் ராணுவம் மற்றும் போலீஸ் பாதுகாப்பு உடன் ஊர்வமாக சென்ற வீடியொ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Arshad Nadeem's father hugging him after he reached airport. Must be the best moment of his life after all he supported his son to chase his dream and now his son has won an Olympics gold medal.
This is what we call a happy ending.pic.twitter.com/RVTqQSSl0H

— Abdullah (@abdullahhammad4)

 

 

Waking up in Melbourne to amazing footage from Lahore! 👏

Huge congratulations to Arshad Nadeem on an incredible performance! 🙌
Well done, Lahore! You're making us proud! 👍🏼 pic.twitter.com/t55QWHifAa

— Ibrahim Badees (@IbrahimBadees)

 

 

Waking up in Melbourne to amazing footage from Lahore! 👏

Huge congratulations to Arshad Nadeem on an incredible performance! 🙌
Well done, Lahore! You're making us proud! 👍🏼 pic.twitter.com/t55QWHifAa

— Ibrahim Badees (@IbrahimBadees)

 

click me!