பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடக்க விழாவின் போது தென் கொரியா விளையாட்டு வீரர்களை வட கொரியா என்று அறிமுகம் செய்ததற்காக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியானது பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளது.
பாரிஸில் 1900, 1924க்கு பிறகு 100 ஆண்டுகளைத் தொடர்ந்து ஒலிம்பிக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 33ஆவது ஒலிம்பிக் தொடர் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில், இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். மொத்தமாக 10,714 விளையாட்டு வீரர்கள் 32 விளையாட்டுகளில் 329 போட்டிகளுக்காக விளையாடி வருகின்றனர். வரலாற்றில் முதல் முறையாக ஒலிம்பிக் ஸ்டேடியத்திற்கு வெளியில் செய்ன் நதிக்கரையில் தொடக்க விழா நடைபெற்றது.
undefined
இந்த தொடரில் இடம் பெற்ற 10,714 விளையாட்டு வீரர்கள் 160க்கும் அதிகமான படகுகளில் 6 கிமீ தூரம் வரையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். ஆஸ்டர்லிட்ஸ் பகுதியில் தொடங்கி டிரோகெடெரோ வரையில் ஒவ்வொரு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் அணிவகுத்து சென்றனர். முதல் நாடாக ஒலிம்பிக்கின் தாயகமான கிரீஸ் கொடியை ஏந்தி அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தியது. இதையடுத்து, ஆப்கானிஸ்தான் தென் ஆப்பிரிக்கா, அல்ஜீரியா, அங்கோலா, ஆண்டிகுவா, பர்புடா, சவுதி அரேபியா, அர்ஜெண்டினா, அரூபா, ஆஸ்ட்ரியா, அஜர்பைஜான், பஹ்ரைன், பிரேசில், பல்கேரியா, என்று ஒவ்வொரு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் அணி வகுத்து சென்றனர்.
அப்போது தென் கொரியா நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அணி வகுத்து வந்தனர். அவர்களை வட கொரியா என்று ஒலிம்பிக் கமிட்டி அறிமுகம் செய்தது. இந்த நிலையில் தான் அதற்காக தற்போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியானது பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து ஒலிம்பிக் கமிட்டியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் கூறியிருப்பதாவது: தொடக்க விழாவின் போது கொரிய அணியை அறிமுகப்படுத்திய போது ஏற்பட்ட தவறுக்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளது.
தென் கொரிய விளையாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் துணை அமைச்சர் ஜாங் மி ரான், இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் உடனான சந்திப்பைக் கோரினார். தென் கொரியாவின் வெளியுறவு அமைச்சகம் பிரான்ஸ் அரசிடம் "ஒரு வலுவான புகாரை" பதிவு செய்யும்படி அமைச்சகம் கேட்டுக் கொண்டது.
தென் கொரியாவின் ஒலிம்பிக் கமிட்டி, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்குமாறு பாரிஸ் விளையாட்டுப் போட்டிகளின் ஏற்பாட்டாளர்களிடம் தனித்தனியாகக் கேட்டுக் கொண்டதாக அந்த கூறப்பட்டுள்ளது. இதையடுத்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மீட்டிங் ஒன்றிற்கு ஏற்பாடு செய்து அதில் தொடக்க விழாவின் போது செய்த தவறுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
An error occurred in our broadcast when introducing the team of the National Olympic Committee (NOC) of the Republic of Korea during the Opening Ceremony, we apologise sincerely. pic.twitter.com/LfUPLrtaYv
— IOC MEDIA (@iocmedia)