பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் துப்பாக்கி சுடுதல் 10 மீ ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் இந்திய வீரர்களான சரப்ஜோத் சிங் மற்றும் அர்ஜூன் சீமா 9 மற்றும் 18ஆவது இடங்களை பிடித்து இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளனர்.
ஒலிம்பிக் தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியான 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் கலப்பு அணி போட்டியில் இந்திய ஜோடியான ரமீதா ஜிண்டால் மற்றும் அர்ஜூன் பாபுதா ஜோடி 6ஆவது இடம் பிடித்து பதக்க சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது. இதே போன்று சஞ்சீவ் சிங் மற்றும் இளவேனில் வளரிவன் ஜோடி 12ஆவது இடம் பிடித்து வெளியேறியது. பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரானது பிரம்மாண்டமாக தொடங்கி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியா 16 விளையாட்டுகளில் பங்கேற்கிறது. இதில், 117 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
undefined
முதல் நாளான இன்று இந்தியா துப்பாக்கி சுடுதல், ரோவிங், டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், குத்துச்சண்டை, ஹாக்கி போன்ற போட்டிகளில் பங்கேற்கிறது. ஒலிம்பிக் தொடரின் முதல் போட்டியான 10 மீர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் கலப்பு அணி போட்டி நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் ரமீதா ஜிண்டால் – அர்ஜூன் பாபுதா ஜோடி மற்றும் சந்தீப் சிங் மற்றும் இளவேனில் வளரிவன் ஜோடி பங்கேற்றது.
இந்தியா 1 (சந்தீப் சிங் மற்றும் இளவேனில் வளரிவன்) மொத்தமாக 626.3 புள்ளிகள் மட்டுமே பெற்று 12ஆவது இடம் பிடித்து பதக்க சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. இதே போன்று இந்தியா 2 அணியில் இடம் பெற்றிருந்த ரமீதா ஜிண்டால் மற்றும் அர்ஜூன் பாபுதா இருவரும் இணைந்து 628.7 புள்ளிகள் பெற்று 6ஆவது இடம் பிடித்து 1.0 புள்ளிகள் வித்தியாசத்தில் பதக்க சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியது.
இதைத் தொடர்ந்து 10 மீர் ஏர் பிஸ்டல் ஆண்களுக்கான தனிநபர் தகுதி சுற்று போட்டி நடைபெற்றது. இதில், இந்திய வீரர்களான சரப்ஜோத் சிங் மற்றும் அர்ஜூன் சீமா இருவரும் பங்கேற்றனர். இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய சரப்ஜோத் சிங் முதல் சீரிஸில் 9, 10, 9.5, 9, 9, 9, 9 என்று புள்ளிகள் பெற்று 28ஆவது இடத்தில் இருந்தார். பின்னர் 2ஆவது சீரிஸில் 9, 10 என்று தொடங்கி 19ஆவது இடத்திற்கு முன்னேறினார். கடைசியாக சரப்ஜோத் சிங் 577 புள்ளிகள் பெற்று 9ஆவது இடம் பிடித்து பதக்க சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறினார். இதே போன்று அர்ஜூன் சீமா 574 புள்ளிகள் பெற்று இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.