
பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரானது பிரம்மாண்டமாக தொடங்கியது. இதையடுத்து போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியா 16 விளையாட்டுகளில் பங்கேற்கிறது. இதில், 117 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். ஒலிம்பிக் தொடரின் முதல் போட்டியானது 10 மீர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் கலப்பு அணி போட்டி நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் ரமீதா ஜிண்டால் – அர்ஜூன் பாபுதா ஜோடி மற்றும் சந்தீப் சிங் மற்றும் இளவேனில் வளரிவன் ஜோடி பங்கேற்றது.
ன்று பிற்பகல் 12.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கியது. இதில் மொத்தமாக 28 ஜோடிகள் பங்கேற்றன. இந்த போட்டியில் இந்தியா தகுதி உலக சாதனையாக 635.8 ஆக இருந்தது. சந்தீப் சிங் 10.8 புள்ளிகளுடன் தனது செட்டை தொடங்கினார். இதே போன்று இளவேனில் வளரிவன் 10.5 மற்றும் 10.7 என்று தனது செட்டை தொடங்கினார். ஆரம்பத்தில் இந்தியா 3ஆவது இடத்தில் இருந்தது. இதையடுத்து 3 முறை 10.2 புள்ளிகள் மற்றும் 10.1 புள்ளிகள் பெறவே இந்தியா 21ஆவது இடத்திற்கு சரிந்தது.
இதைத் தொடர்ந்து இளவேனில் 2 முறை 10.5 புள்ளிகள் பெறவே இந்தியா 12ஆவது இடத்திற்கு முன்னேறியது. சந்தீப் தனது 5ஆவது ஷாட்டில் 9.9 புள்ளிகள் பெற்றார். கடைசியாக இந்தியா 1 (சந்தீப் சிங் மற்றும் இளவேனில் வளரிவன்) மொத்தமாக 626.3 புள்ளிகள் மட்டுமே பெற்று 12ஆவது இடம் பிடித்து பதக்க சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. இதே போன்று இந்தியா 2 அணியில் இடம் பெற்றிருந்த ரமீதா ஜிண்டால் மற்றும் அர்ஜூன் பாபுதா இருவரும் இணைந்து 628.7 புள்ளிகள் பெற்று 6ஆவது இடம் பிடித்து 1.0 புள்ளிகள் வித்தியாசத்தில் பதக்க சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியது.
Paris Olympics 2024 – ஜூலை 27, இந்தியா விளையாடும் போட்டிகள் என்னென்ன? முதல் பதக்கம் வெல்லுமா?
சீனா (632.2), கொரியா (631.4), கஜகஸ்தான் (630.8) மற்றும் ஜெர்மனி (629.7) ஆகிய நாடுகள் 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணி பதக்க சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 10 மீர் ஏர் பிஸ்டல் ஆண்களுக்கான தகுதி சுற்று போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. இதில் போட்டியாளார்களுக்கு 75 நிமிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 75 நிமிடங்களில் 60 ஷாட்டுகள் வீச வேண்டும். இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 10 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.