சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் முன்னேற்றம்...

 
Published : Dec 08, 2017, 10:21 AM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் முன்னேற்றம்...

சுருக்கம்

Srikanth progress at the International Badminton Rankings ...

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையின் ஆடவர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த்  4-வது இடத்திற்கு முன்னேரியுள்ளார். இதற்கு முன்னர் அவர் ஐந்தவது இடத்தில் இருந்தார்.

காயம் காரணமாக சீன ஓபன், ஹாங்காங் ஓபன் போட்டிகளை தவிர்த்த ஸ்ரீகாந்த், அடுத்த வாரம் நடைபெறவுள்ள துபை சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்திய இளம் வீரரான லக்ஷயா சென் 19 இடங்கள் முன்னேறி 89-வது இடத்துக்கு வந்துள்ளார்.

இந்த சீசனில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதை அடுத்து லக்ஷயா இத்தகைய முன்னேற்றத்தை அடைந்துள்ளார்.

யுராஸியா பல்கேரிய ஓபன், இந்திய சர்வதேச சீரிஸ் ஆகிய பட்டங்களை கைப்பற்றிய லக்ஷயா சென், டாடா ஓபன் இந்தியா சர்வதேச போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இதர இந்திய வீரர்களான ஹெச்.எஸ்.பிரணாய், சாய் பிரணீத் ஆகியோர் முறையே 10 மற்றும் 17-வது இடங்களில் நீடிக்கின்றனர்.

சர்வதேச தரவரிசையின் மகளிர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து தனது 3-வது இடத்திலும், சாய்னா நெவால் 10-வது இடத்திலும் உள்ளனர்.

இளம் வீராங்கனை ரிதுபர்னா தாஸ் மூன்று இடங்கள் முன்னேறி 49-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

அதேபோன்று கலப்பு இரட்டையர் பிரிவில் பிரணவ் ஜெர்ரி சோப்ரா - சிக்கி ரெட்டி இணை  19-வது இடத்தில் தொடர்கின்றனர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஓவராக குடித்து மட்டையான இங்கிலாந்து வீரர்கள்! ஆஷஸ் தோல்விக்கு காரணம் இப்பதான் புரியுது!
20 வயதில் டி20 உலகக்கோப்பை வெற்றி; அதுவே தொடர் வெற்றிக்கு நம்பிக்கை தந்தது: ரோஹித் சர்மா