2022ம் ஆண்டில் விளையாட்டுலகை சோகத்தில் ஆழ்த்திய மரணங்கள்

By karthikeyan V  |  First Published Dec 20, 2022, 9:41 PM IST

2022ம் ஆண்டில் விளையாட்டுலகை சோகத்தில் ஆழ்த்திய விளையாட்டு வீரர்களின் மரணங்களை பார்ப்போம்.
 


2022ம் ஆண்டு நிறைவடைந்து இன்னும் சில தினங்களில் 2023 புத்தாண்டு பிறக்கவுள்ளது. 2022ம் ஆண்டு விளையாட்டு உலகை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்திய விளையாட்டு வீரர்களின் மரணங்களை பார்ப்போம்.

1. ஷேன் வார்ன் 

Tap to resize

Latest Videos

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் லெஜண்ட் ஸ்பின்னர் ஷேன் வார்ன். சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த ஸ்பின்னர்களில் ஒருவர் வார்ன். டெஸ்ட் கிரிகெட்டில் 708 விக்கெட்டுகளை வீழ்த்தி 2வது இடத்தில் உள்ளார். 1993ம் ஆண்டு மைக் கேட்டிங்கிற்கு அவர் வீசிய பந்துதான் நூற்றாண்டின் சிறந்த பந்தாக பார்க்கப்படுகிறது. 

பாண்டிங்கை விட தோனி தான் சிறந்த கேப்டன்..! காரணத்துடன் கறாரா கூறிய ஆஸி., முன்னாள் வீரர்

மிகச்சிறந்த கிரிக்கெட் மூளை ஷேன் வார்ன். 52 வயதான வார்ன் கடந்த மார்ச் மாதம் தாய்லாந்துக்கு இன்பச்சுற்றுலா சென்ற இடத்தில், மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். அவர் அறையில் இறந்து கிடந்ததாலும் அவரது அறையில் ரத்த கறைகள் இருந்ததாலும் அவரது இறப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் மாரடைப்பால் தான் ஷேன் வார்ன் இறந்தார் என்பது பிரேத பரிசோதனையில் உறுதியானது.

2. ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்

ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ். அதிரடி பேட்டிங், அருமையான ஸ்பின் பவுலிங், அபாரமான ஃபீல்டிங் என ஒரு முழுமையான ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ். 1998ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணிக்காக ஆடிய 26 டெஸ்ட் மற்றும் 198 ஒருநாள் போட்டிகளில் ஆடி சுமார் 6500 ரன்களை குவித்துள்ளார். 

சிறந்த கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாது சர்ச்சைகளின் நாயகனாகவும் திகழ்ந்தவர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ். 46 வயதான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கடந்த மே மாதத்தில் கார் விபத்தில் உயிரிழந்தார். ஆண்ட்ரூ சைமண்ட்ஸில் மரணம் கிரிக்கெட் உலகை சோகத்தில் ஆழ்த்தியது.

3. ஃப்ரெடி ரின்கான்

கொலம்பியா கால்பந்து வீரர் ஃப்ரெடி ரின்கான். 1990 முதல் 2001 வரை 11 ஆண்டுகள் கொலம்பியா அணிக்காக கால்பந்து ஆடிய சிறந்த கால்பந்து வீரர். 55 வயதான இவரும் கடந்த ஏப்ரல் மாதத்தில் கார் விபத்தில் தான் உயிரிழந்தார்.

4. அட்ரெய்ன் பெய்ன்

அமெரிக்காவை சேர்ந்த 31 வயதான அட்ரெய்ன் பெய்ன் என்ற கூடைப்பந்து வீரர் கடந்த மே மாதம் சுட்டு கொல்லப்பட்டார். இவரது கொலை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மெஸ்ஸி மட்டும் இந்தியாவில் பிறந்திருந்தால்.... வழக்கம்போலவே சேவாக் குசும்பான பதிவு..! ரசிகர்கள் தக்க பதிலடி

5. ராட் மார்ஷ்

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராட் மார்ஷ். 1970ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமான மார்ஷ், 96 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3633 ரன்களும், 92 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1225 ரன்களையும் அடித்துள்ளார். 74 வயதான ராட் மார்ஷ் கடந்த மார்ச் மாதம் உயிரிழந்தார்.
 

click me!