INDW vs AUSW: கார்ட்னெர், கிரேஸ் காட்டடி அரைசதம்.. இந்தியாவிற்கு கடின இலக்கை நிர்ணயித்த ஆஸ்திரேலிய மகளிர் அணி

By karthikeyan VFirst Published Dec 20, 2022, 8:44 PM IST
Highlights

மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 196 ரன்களை குவித்து, 197 ரன்கள் என்ற கடின இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் 4 போட்டிகளில் 3-1 என ஆஸ்திரேலியா தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய மகளிர் அணி:

ஸ்மிரிதி மந்தனா, ஷஃபாலி வெர்மா, ஹர்லீன் தியோல், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), தேவிகா வைத்யா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தீப்தி ஷர்மா, ராதா யாதவ், ராஜேஷ்வரி கெய்க்வாட், அஞ்சலி சர்வானி, ரேணுகா தாகூர் சிங்.

பாண்டிங்கை விட தோனி தான் சிறந்த கேப்டன்..! காரணத்துடன் கறாரா கூறிய ஆஸி., முன்னாள் வீரர்

ஆஸ்திரேலிய மகளிர் அணி:

பெத் மூனி (விக்கெட் கீப்பர்), லிட்ச்ஃபீல்ட், தாலியா மெக்ராத் (கேப்டன்), ஆஷ்லே கார்ட்னெர், எலைஸ் பெர்ரி,  கிரேஸ் ஹாரிஸ், அன்னாபெல் சதர்லேண்ட், ஹீதர் கிரஹாம், அலானா கிங், கிம் கார்த், டார்ஸி ப்ரௌன்.

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகள் பெத் மூனி(2), லிட்ச்ஃபீல்ட்(11) ஆகிய இருவரும் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்தனர். கேப்டன் மெக்ராத் 26 ரன்களும், எலைஸ் பெர்ரி 18 ரன்களும் மட்டுமே அடித்தனர். ஆனால் அதன்பின்னர் களமிறங்கிய கார்ட்னெர் மற்றும் கிரேஸ் ஹாரிஸ் ஆகிய இருவரும் இந்திய பவுலிங்கை காட்டடி அடித்து அரைசதம் அடித்தனர்.

மெஸ்ஸி மட்டும் இந்தியாவில் பிறந்திருந்தால்.... வழக்கம்போலவே சேவாக் குசும்பான பதிவு..! ரசிகர்கள் தக்க பதிலடி

அதிரடியாக ஆடி இருவருமே அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கார்ட்னெர் 32 பந்தில் 66 ரன்களும், கிரேஸ் ஹாரிஸ் 35 பந்தில் 64 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 196 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய அணி, 197 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

click me!