ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி டிராபி தொடரில் இன்று நடந்த தென் கொரியா மற்றும் சீனா அணிகளுக்கு இடையிலான போட்டி டிராவில் முடிந்தது.
சென்னையில் 7ஆவது ஆசிய ஆண்களுக்கான ஹாக்கி டிராபி தொடர் கடந்த 3 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடர் வரும் 12 ஆம் தேதி வரையில் சென்னையில் நடக்கிறது. இந்த தொடரில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 3 முறை ஆண்களுக்கான ஆசிய ஹாக்கி டிராபியை கைப்பற்றியுள்ளன. தென் கொரியா அணி ஒரு முறை டிராபியை கைப்பற்றியிருக்கிறது.
அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கிய அரியலூர் வீரர் செல்வம் கார்த்தி!
இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 3 போட்டிகள் நடக்கிறது. இதில் முதல் போட்டியில் தென் கொரியா மற்றும் சீனா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடிக்கவே போட்டி சமனில் முடிந்தது. இதையடுத்து நடந்த 2 ஆவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஜப்பான் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் ஜப்பான் 3 கோல்கள் அடித்து முன்னிலையில் உள்ளது. பாகிஸ்தான் 2 கோல் அடித்துள்ளது. இன்று நடக்கும் கடைசி போட்டியில் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் இருக்கும் இந்தியாவும், நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் மலேசியாவும் மோதுகின்றன.