சென்னையில் ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி டிராபி தொடரில் இன்று ஒரே நாளில் 3 போட்டிகள் நடத்தப்படுகிறது.
சென்னையில் 7ஆவது ஆசிய ஆண்களுக்கான ஹாக்கி டிராபி தொடர் கடந்த 3 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடர் வரும் 12 ஆம் தேதி வரையில் சென்னையில் நடக்கிறது. இந்த தொடரில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 3 முறை ஆண்களுக்கான ஆசிய ஹாக்கி டிராபியை கைப்பற்றியுள்ளன. தென் கொரியா அணி ஒரு முறை டிராபியை கைப்பற்றியிருக்கிறது.
IPL Rohit Sharma: ஐபிஎல் தொடர் மூலமாக அதிக சம்பளம் வாங்கும் இந்திய கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?
இதில், மலேசியா 2 போட்டிகளில் விளையாடி 2லும் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா 2 போட்டியில் விளையாடி ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. இதே போன்று தென் கொரியா அணியும் ஒரு வெற்றி பெற்று ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. ஜப்பான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய 2 போட்டிகளில் ஒன்றில் டிரா அடைந்துள்ளன. ஒரு போட்டிகளில் தோல்வி கண்டுள்ளன.
WI vs IND 2nd T20: கயானா யாருக்கு சாதகம்? இந்தியாவிற்கு வாய்ப்பு இருக்கா?
இந்த நிலையில், இன்று ஒரே நாளில் 3 போட்டிகள் நடக்கிறது. இதில், மாலை 4 மணிக்கு தொடங்கும் போட்டியில் தென் கொரியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அடுத்து மாலை 6.15 மணிக்கு சீனா மற்றும் மலேசியா அணிகள் மோதுகின்றன. கடைசியாக இரவு 8.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் மோதுகின்றன.
யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இடம் கிடைக்குமா? இந்திய அணியில் யாருக்கெல்லாம் இடம்?