இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி கயானாவில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலமாக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி தென் அமெரிக்காவின் கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.
யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இடம் கிடைக்குமா? இந்திய அணியில் யாருக்கெல்லாம் இடம்?
கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இந்த மைதானத்தில் 11 டி20 போட்டிகள் நடந்துள்ளது. இதில், முதலில் ஆடிய அணி 4 முறையும், சேஸ் செய்த அணி 4 முறையும் வெற்றி கண்டுள்ளன. ஒரு அணி கூட 200 ரன்களுக்கு மேல் ரன்கள் குவிக்கவில்லை. கடந்த 3 போட்டிகளில் முதலில் பேட்டிங் ஆடிய அணியின் ரன்கள் முறையே 146, 157, 163 ரன்கள் ஆகும்.
தேசிய கொடியை பிடித்தவாறு ஸ்கை டைவிங் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்த ஐடி ஊழியர்!
இந்த மைதானம் பொதுவாக பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானமாக உள்ளது. ஆதலால், பேட்ஸ்மேன்களால் அதிக ரன்கள் குவிக்க முடியவில்லை. ஒட்டுமொத்தமாக இந்த மைதானத்தில் 27 டி20 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய அணி 13 முறையும், 2ஆவது ஆடிய அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஆவரேஜ் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 122, 2ஆவது இன்னிங்ஸ் ஸ்கோர் 93. இந்த மைதானத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் 194 ஆகும். குறைந்தபட்ச ரன்கள் 46. சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ரன்கள் 169 ஆகும்.
Asia Cup 2023: ஆசிய கோப்பை 2023: இந்திய அணியில் யாருக்கெல்லாம் இடம் கிடைக்கும்?