ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடர் மூலமாக அதிக சம்பளம் வாங்கும் கிரிக்கெட் வீரர்களில் ரோகித் சர்மா முக்கியமானவராக கருதப்படுகிறார்.
ஆண்டுதோறும் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஒவ்வொரு ஏலத்தின் மூலமாக இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் தங்களது அணியிடமிருந்து அதிக தொகையை பெறுகிறார்கள். இன்றுவரை அதிக சம்பளம் வாங்கும் ஐபிஎல் வீரர் யார் என்பது பலருக்குத் தெரியாது, அது எம்.எஸ்.தோனி அல்லது விராட் கோலி அல்ல என்பதை அறிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள்.
WI vs IND 2nd T20: கயானா யாருக்கு சாதகம்? இந்தியாவிற்கு வாய்ப்பு இருக்கா?
ஐபிஎல் தொடர் மூலமாக அதிக சம்பளம் வாங்குபவர்களின் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியின்ஸ் கேப்டன் ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார். கோலி மற்றும் தோனி இருவரும் இன்று வரை மிகவும் விலையுயர்ந்த ஐபிஎல் வீரர்களாகக் கருதப்பட்டாலும், அதிக ஐபிஎல் சம்பாதித்த கிரிக்கெட் வீரர் தற்போதைய இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஆவார. அவர்களின் மொத்த சம்பளத்தில் ஒரு பகுதியை மட்டுமே கொண்டு சிஎஸ்கே கேப்டனை மிஞ்சியுள்ளார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இடம் கிடைக்குமா? இந்திய அணியில் யாருக்கெல்லாம் இடம்?
ரோகித் சர்மா ஐபிஎல் 2023 இல் அவரது அணியான மும்பை இந்தியன்ஸால் கேப்டனாக கடந்த ஆண்டைப் போலவே ரூ 16 கோடி சம்பளத்திற்குத் தக்க வைத்துக் கொண்டார். முன்னதாக, சர்மா மூன்று ஆண்டுகளுக்கு ஐபிஎல் சம்பளமாக ரூ. 15 கோடி பெற்று வந்தார்.
தேசிய கொடியை பிடித்தவாறு ஸ்கை டைவிங் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்த ஐடி ஊழியர்!
அவரது அனைத்து ஐபிஎல் ஏலப் பணத்தையும் சேர்த்து, ரோஹித் ஷர்மாவின் மொத்த ஐபிஎல் வருவாய் ரூ. 178 கோடிக்கு மேல் வருகிறது, சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் தோனியை வெறும் 2 கோடியுடன் முந்தி முதலிடத்தை பிடித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாக ரூ.176 கோடி வரையிலும், விராட் கோலி ரூ.173 கோடி வரையிலும் வருமானம் பெற்று வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ரூ.110 கோடி வரையிலும் வருமானம் ஈட்டி வந்துள்ளார். இவர்களது வரிசையில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வருமானம் ஈட்டியவர்களின் பட்டியலில் கௌதம் காம்பீர், ஷிகர் தவான் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
Asia Cup 2023: ஆசிய கோப்பை 2023: இந்திய அணியில் யாருக்கெல்லாம் இடம் கிடைக்கும்?