முதல் போட்டியிலேயே இந்தியாவை வீழ்த்தி முன்னேற்றம் கண்டது தென் ஆப்பிரிக்கா...

 
Published : Jan 09, 2018, 11:10 AM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
முதல் போட்டியிலேயே இந்தியாவை வீழ்த்தி முன்னேற்றம் கண்டது தென் ஆப்பிரிக்கா...

சுருக்கம்

South Africa defeated India in the first tournament

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரில் முன்னிலை பெற்றது தென் ஆப்பிரிக்கா.

கேப் டவுன் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் 4-வது நாளான நேற்று தென் ஆப்பிரிக்கா தனது 2-வது இன்னிங்ஸில் 130 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனையடுத்து 208 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு தனது 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா 135 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததால் தென் ஆப்பிரிக்கா 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு இன்னிங்ஸ்களிலுமாக 9 விக்கெட்டுகள் வீழ்த்திய தென் ஆப்பிரிக்காவின் பிலாண்டர் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 73.1 ஓவர்களில் 286 ரன்களுக்கு முதல் நாளிலேயே ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டி வில்லியர்ஸ் 65 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியும் முதல் நாளிலேயே 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இரண்டாவது நாளில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் 73.4 ஓவர்களில் 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா.  ஹார்திக் பாண்டியா மட்டும் அதிகபட்சமாக 93 ஓட்டங்கள் விளாசினார்.

தென் ஆப்பிரிக்க தரப்பில் பிலாண்டர் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 77 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற தென் ஆப்பிரிக்கா தனது 2-வது இன்னிங்ஸைத் தொடங்கி 2 விக்கெட் இழப்புக்கு 65 ஓட்டங்களுடன் 2-வது நாள் ஆட்டத்தை நிறைவு செய்தது.

இந்த நிலையில், 3-ஆம் நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் முழுமையாக கைவிடப்பட்டது. பின்னர் நேற்று நடைபெற்ற 4-வது நாள் ஆட்டத்தை தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 2 ஓட்டங்கள் , ஆம்லா 4 ஓட்டங்களுடன் தொடங்கினர்.

இதில் ஆம்லா அதே ரன்னுடனும், ரபாடா 5 ஓட்டங்களுடனும் முகமது ஷமி பந்துவீச்சில் வெளியேறினர்.

அடுத்து வந்தவர்களில் டி வில்லியர்ஸ் மட்டும் அதிகமாக 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 35 ஓட்டங்கள்  எடுத்தார். கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் டக் அவுட்டாக, டி காக் 8 ஓட்டங்களில் வெளியேறினார்.

பிலாண்டரும் டக் அவுட்டாக, கேசவ் மஹராஜ் 15 ஓட்டங்கள் , மோர்ன் மோர்கெல் 2 ஓட்டங்களுடன் வீழ்ந்தனர்.

இந்திய தரப்பில் பும்ரா, ஷமி தலா 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர், பாண்டியா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 208 ஓட்டங்கள் இலக்குடன் தனது 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியது இந்தியா.

இதில் தொடக்க வீரர்களான முரளி விஜய் - ஷிகர் தவன் முறையே 13 மற்றும் 16 ஓட்டங்களுடன் வீழ்ந்தனர். புஜாரா 4 ஓட்டங்களில் நடையைக் கட்டினார்.

அதனைத் தொடர்ந்து வந்த கேப்டன் கோலி 28 ஓட்டங்கள் , உடன் நின்ற ரோஹித் 10 ஓட்டங்களில் வெளியேறினர்.

பின்னர் வந்தவர்களில் ரித்திமான் சாஹா 8 ஓட்டங்கள் , பாண்டியா 1 ஓட்டத்தில் ஆட்டமிழக்க, அஸ்வின் மட்டும் அதிகபட்சமாக 5 பவுண்டரிகளுடன் 37 ஓட்டங்கள் அடித்தார். முகமது ஷமி 4 ரன்னுடன் வீழ்ந்தார். கடைசி விக்கெட்டாக பும்ரா டக் அவுட் ஆனார்.

இதில் அஸ்வின், ஷமி, பும்ரா விக்கெட்டுகளை 4 பந்துகளில் வீழ்த்தினார் பிலாண்டர். புவனேஷ்வர் குமார் 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தென் ஆப்பிரிக்க தரப்பில் பிலாண்டர் 6, மோர்கெல் மற்றும் ரபாடா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதில் வெற்றி பெற்று மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரில் முன்னிலை பெற்றது தென் ஆப்பிரிக்கா.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஓபனிங் முதல் பினிஷிங் வரை.. இந்திய அணியில் இடம் பிடிக்க புதிய அவதாரமெடுத்த இஷான் கிஷன்
விஜய் ஹசாரே தொடரில் அதிரடி சதம்.. கம்பீரை கழுவி கழுவி ஊற்றும் ரோகித், கோலி ரசிகர்கள்