
செய்யது முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டியின் தெற்கு மண்டல ஆட்டத்தில் தமிழகம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆந்திர பிரதேசத்தை வென்றது.
செய்யது முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டியின் தெற்கு மண்டல ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆந்திரம் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 119 ஓட்டங்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய தமிழகம் 14.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 122 ஓட்டங்கள் எடுத்து வென்றது.
தெற்கு மண்டலத்தின் இதர ஆட்டங்களில் ஹைதராபாத் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கேரளத்தையும், கர்நாடகம் 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கோவாவையும் வென்றன.
மேற்கு மண்டல பிரிவில் சௌராஷ்டிரம் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மகாராஷ்டிரத்தையும், மும்பை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத்தையும் வீழ்த்தியது.
மத்திய மண்டலத்தில் ராஜஸ்தான் 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மத்திய பிரதேசத்தையும், விதர்பா 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சத்தீஸ்கரையுன் வீழ்த்தியது.
வடக்கு மண்டலத்தில் இமாசல பிரதேச அணி ஹரியாணாவையும், சர்வீசஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஜம்மூ காஷ்மீரையும் வீழ்த்தியது.
கிழக்கு மண்டல ஆட்டத்தில் மேற்கு வங்கம் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஒடிஸாவையும், திரிபுரா 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அஸ்ஸாமையும் வீழ்த்தியது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.