தடகளத்தில் இருந்து கால்பந்து போட்டியில் கால் பதிக்கிறார் உசேன் போல்ட்...

First Published Jan 9, 2018, 10:58 AM IST
Highlights
Hussein Bolt plays football in a football match


ஜமைக்காவின் ஓட்டப் பந்தய வீரரான உசைன் போல்ட் தடகளத்தில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், தற்போது கால்பந்து விளையாட்டில் கால் பதிக்கிறார்.

தொழில்முறை கால்பந்து வீரராவதை தனது கனவாகக் கொண்டிருக்கும் உசேன் போல்ட், அதற்கான முயற்சியாக ஜெர்மனியைச் சேர்ந்த "போரூஸியா டார்ட்மன்ட்' கால்பந்து கிளப் அணியில் சோதனை முறையில் களம் காண்கிறார்.

பன்டல்ஸ்லிகா அணிக்கு எதிரான அந்த ஆட்டத்தில் போரூஸியா அணியில் பங்கேற்கிறார் போல்ட்.

அதுகுறித்து போல்ட், "மார்ச் மாதம் நடைபெறவுள்ள பன்டல்ஸ்லிகா அணிக்கு எதிரான ஆட்டத்தைப் பொருத்தே அடுத்தகட்ட முடிவை மேற்கொள்ள உள்ளேன்.

மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடுவது எனது மிகப்பெரிய கனவுகளில் ஒன்றாகும். கால்பந்தில் தேர்ச்சி அடையும் பட்சத்தில், அந்த அணியில் இணையும் வகையில் கடுமையாக பயிற்சி எடுப்பேன்.

நான் தகுதியுடன் தயார் நிலையில் இருக்கும் பட்சத்தில், மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைவதற்கு இயன்ற முயற்சிகளைச் செய்வதாக அந்த அணியின் முன்னாள் மேலாளர் அலெக்ஸ் ஃபெர்குசன் கூறியுள்ளார்" என்று அவர் தெரிவித்தார்.

 

tags
click me!