
கேப்டவுன் டெஸ்ட் போட்டியில், தோனியின் விக்கெட் கீப்பிங் சாதனையை ரித்திமான் சஹா முறியடித்துள்ளார்.
இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணி 286 ரன்களும் இந்திய அணி 209 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் மிரட்டலான வேகப்பந்து வீச்சில், தென்னாப்பிரிக்க அணி, வெறும் 130 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையடுத்து 208 ரன்கள் என்ற எளிய இலக்குடன் இந்திய அணி ஆடிவருகிறது.
இந்த ஆட்டத்தில், 10 விக்கெட்டுகளில் விக்கெட் கீப்பர் சஹாவின் பங்களிப்பு உள்ளது. முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ்களில் தலா 5 கேட்ச்களை பிடித்து மொத்தம் 10 விக்கெட்டுக்கு சஹா, தனது பங்களிப்பை அளித்துள்ளார். இந்திய விக்கெட் கீப்பரின் அதிகபட்ச பங்களிப்பு இதுதான்.
இதற்கு முன்னதாக 2014ம் ஆண்டு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில், 9 விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு காரணமாக அப்போதைய விக்கெட் கீப்பர் தோனி இருந்ததே, இந்திய அளவில் சாதனையாக இருந்தது.
தற்போது தோனியை பின்னுக்குத் தள்ளி சஹா முதலிடத்தை பிடித்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.