சேவாக்கை ஓரங்கட்டிய தோனி..! உண்மையா? வதந்தியா? தெரிந்துகொள்ளுங்கள்

First Published Jul 9, 2018, 4:08 PM IST
Highlights
sehwag retaliation to criticize of fan


ரசிகர் ஒருவரின் கிண்டலான பதிவிற்கு சேவாக் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான தோனி, கடந்த 7ம் தேதி 37வது பிறந்தநாளை கொண்டாடினார். இங்கிலாந்து தொடரில் ஆடிவரும் தோனிக்கு, இரண்டாவது டி20 போட்டி முடிந்த மறுநாள் பிறந்தநாள் என்பதால், கார்டிப் நகரில் பிறந்தநாள் கொண்டாடினார். தோனிக்கு சச்சின், சேவாக், ரெய்னா, கோலி உள்ளிட்ட வீரர்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களின் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

பொதுவாக சேவாக்கின் வாழ்த்துக்கள் சற்று வித்தியாசமானதாக இருக்கும். தோனிக்கும் தனக்கே உரிய பாணியில் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார் சேவாக். தோனி ஸ்டம்பிங் ஆகாமல் இருப்பதற்காக ஒருமுறை காலை எட்டி கிரீஸுக்குள் வைத்தபோது, இரு கால்களும் விரிந்த நிலையில் இருக்கும். அந்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்த சேவாக், இதைவிட உங்கள் வாழ்வு நீட்டிக்க வேண்டும். உங்கள் ஸ்டம்பிங்கைவிட வேகமாக உங்கள் வாழ்வில் அனைத்து மகிழ்ச்சிகளும் கிடைக்க வேண்டும். ”ஓம் ஃபினிஷாய நமஹ” என வாழ்த்து தெரிவித்திருந்தார். 

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/HappyBirthdayMSDhoni?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#HappyBirthdayMSDhoni</a> . May your life be longer than this stretch and may you find happiness in everything, faster than your stumpings. Om Finishaya Namaha ! <a href="https://t.co/zAHCX33n1y">pic.twitter.com/zAHCX33n1y</a></p>&mdash; Virender Sehwag (@virendersehwag) <a href="https://twitter.com/virendersehwag/status/1015303401272311808?ref_src=twsrc%5Etfw">July 6, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
 

சேவாக்கின் இந்த டுவீட்டை கிண்டலடித்து ரசிகர் ஒருவர் பதிவிட்டிருந்தார். சேவாக்கின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துவைத்த ஃபினிஷர் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என ரசிகர் ஒருவர் கிண்டலாக பதிவிட்டிருந்தார். 

அதற்கு சேவாக், தவறான கூற்று என பதிலளித்துள்ளார். இதன்மூலம் தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துவைத்தது தோனி இல்லை என தெளிவுபடுத்தியுள்ளார் சேவாக்.

2007ம் ஆண்டு, டிராவிட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியபிறகு, அணியில் சேவாக், யுவராஜ் போன்ற சீனியர் வீரர்கள் இருந்தும் கூட அப்போதைய இளம் வீரர் தோனி கேப்டனாக்கப்பட்டார். பிறகு தோனியின் கேப்டன்சியின் கீழ் பல போட்டிகளில் ஆட சேவாக்கிற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

சேவாக் ஃபார்மில் இல்லாததால் சில போட்டிகளில் சேர்க்கப்படாமல் இருந்தார். ஆனால் அந்த சமயங்களில் தோனி தான் சேவாக்கை ஓரங்கட்டுகிறார் என்ற விமர்சனங்கள் எழுந்தன. எனினும் 2011 உலக கோப்பை அணியில் சேவாக் இருந்தார். இறுதி போட்டியை தவிர மற்ற போட்டிகளில் அவர் சிறப்பாக ஆடி, இந்திய அணியை வெற்றி பெற முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது. 

இன்றளவும் சேவாக்கை ஓரங்கட்டியது தோனி தான் என்ற கருத்து கூறப்படுகிறது. அதுபோன்ற கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரசிகரின் டுவீட்டிற்கு சேவாக் பதிலளித்துள்ளார். 

click me!