ரசிகர்களுக்காக பிரியாவிடை போட்டியில் பங்கேற்கும் சானியா மிர்சா!

Published : Mar 04, 2023, 07:06 PM ISTUpdated : Mar 06, 2023, 10:03 AM IST
ரசிகர்களுக்காக பிரியாவிடை போட்டியில் பங்கேற்கும் சானியா மிர்சா!

சுருக்கம்

டென்னிஸ் வீராங்கனை ஓய்வு அறிவித்ததைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் நாளை நடக்கும் பிரியாவிடை போட்டியில் விளையாடுகிறார்.

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா டென்னிஸ் வாழ்க்கைக்கு பிரியாவிடை கொடுத்தார். கடந்த மாதம் துபாயில் நடந்த சர்வதேச டென்னிஸ் தொடரில் பங்கேற்றார். அதில், இரட்டையர் மகளிரி பிரிவில் அமெரிக்க வீராங்கனை மெடிசின் கி உடன் ஜோடி சேர்ந்து விளையாடினார்.

9 சாதனைகளை முறியடிக்க திட்டமிட்டு 6 சாதனைகளை தகர்த்த தமிழக மாணவிகள்!

இதில் எதிர்பாராத விதமாக தோல்வியடைந்த சானியா மிர்சா ஜோடி தொடரிலிருந்து வெளியேறியது. அதுமட்டுமின்றி டென்னிஸ் வாழ்க்கையிலிருந்தும் விடை பெற்றார். தனது 20 வருட டென்னிஸ் வாழ்க்கையில் 6 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். டென்னிஸ் விளையாட்டிற்கு அடையாளமாக திகழ்ந்த சானியா மிர்சா இன்னும் சில ஆண்டுகள் நாட்டிற்காக விளையாடியிருக்கலாம் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருந்தது. எனினும், டென்னிஸ் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்ற அவருக்கு ஒட்டு மொத்த ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

சனி மஹா பிரதோஷம்: எம்பெருமான் ஈசனை தரிசனம் செய்த கோலி - அனுஷ்கா சர்மா!

இந்த நிலையில், சானியா மிர்சா தனது பிரியாவிடை போட்டியில் விளையாடுகிறார். நாளை காலை 10 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி ஸ்டேடியத்தில் நடக்கும் பிரியாவிடை டென்னிஸ் போட்டியில் தனது உள்ளூர் ரசிகர்களுக்காக பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்ற சானியா மிர்சா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆலோசகராக களமிறங்குகிறார்.

ஷேன் வார்னின் முதலாமாண்டு நினைவு தினம்: வார்ன் வீசிய நூற்றாண்டின் சிறந்த பந்தின் வீடியோ

 

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

IND vs SA 2nd T20: சுப்மன் கில், சூர்யகுமார் படுமோசம்..! இந்தியாவை ஊதித்தள்ளிய தென்னாப்பிரிக்கா!
டி20 உலகக்கோப்பை டிக்கெட் வெறும் 100 ரூபாய் தான்! எப்படி புக் செய்வது? முழு விவரம் இதோ!