
பாங்காங்கில் தாய்லாந்து மாஸ்டர்ஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்றில் இந்தியாவின் சாய் பிரனீத், தென் கொரியாவின் ஜியோன் ஹியோக் ஜின்னை எதிர் கொண்டார். இந்தப் போட்டியில் முதல் செட்டை 24-22 என்று கைப்பற்றிய சாய் பிரனீத், 2ஆவது செட்டை 7-21 என்று இழந்தார். இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டில் சாய் பிரனீத் 22-20 என்று கைப்பற்றி காலிறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.
டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியாவின் சுமித் நாகல் வெற்றி, யுகி பாம்ப்ரி தோல்வி!
இதில், நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் சாய் பிரனீத் மற்றும் சீனாவின் லீ ஷீ பெங் ஆகியோர் மோதினர். முதல் செட்டை சீன வீரர் லீ ஷீ பெங் 21-17 என்று வென்றார். இதே போன்று 2ஆவது செட்டை சாய் பிரனீத் 23-21 என்று கைப்பற்றினார். இறுதியாக வெற்றியை தீர்மானிக்கும் அடுத்த செட்டில் சீன வீரர் 21-18 என்று கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து சாய் பிரனீத் வெளியேறியுள்ளார்.
IND vs AUS: முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன்
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.