டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியாவின் சுமித் நாகல் வெற்றி, யுகி பாம்ப்ரி தோல்வி!

Published : Feb 04, 2023, 09:59 AM IST
டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியாவின் சுமித் நாகல் வெற்றி, யுகி பாம்ப்ரி தோல்வி!

சுருக்கம்

டென்மார்க்கில் நடந்து வரும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல் வெற்றி பெற்றுள்ளார்.  

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி டென்மார்க்கின் ஹில்லராட் பகுதியில் நடந்து வருகிறது. நேற்று தொடங்கிய இந்த தொடர் இன்றுடன் முடிவடைகிறது. டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப் 1 பிரிவில் இந்தியா மற்றும் டென்மார்க் அணிகள் மோதின. இதில், முதல் நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, டென்மார்க்கின் ஹோல்ஹர் ரூனேவை எதிர்கொண்டார். இதில், 2-6, 2-6 என்ற நேர்செட் கணக்கில் யுகி பாம்ப்ரி தோல்வி அடைந்தார்.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அவசர மீட்டிங்.. பஹ்ரைன் பறந்த ஜெய் ஷா..!

இதன் மூலம், 0-1 என்ற கணக்கில் இந்தியா பின் தங்கியது. இதையடுத்து, நடந்த மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் வீரரான சுமித் நாகல், டென்மார்க்கின் ஆகஸ்ட் ஹோம்கிரனுடன் மோதினார். கிட்டத்தட்ட 2 மணிநேரம் 27 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில் சுமித் நாகல் 4-6 என்று முதல் செட்டை கோட்டை விட்ட நிலையில் சுதாரித்துக் கொண்டு ஆடி 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

IND vs AUS: முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன்

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற சுமித் நாகல் தொடரை 1-1 என்று சமன் செய்தார். இதையடுத்து இன்று நடக்கும் இரட்டையர் பிரிவு மற்றும் ரிவர்ஸ் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியா தோல்வியுற்றால் டென்மார்க் டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப் 2 சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

IND vs AUS: ஆஸ்திரேலியாகாரன் பயந்துட்டான்.. இதுதான் அதுக்கு சாட்சி..! தெறிக்கவிடும் கைஃப்

இந்த வெற்றி குறித்து பேசிய சுமித் நாகல் கூறியிருப்பதாவது: நீல நிற ஜெர்சி அணிந்து தாய் நாட்டுக்காக விளையாடுவது என்பது ஒரு தனி உணர்வு தான். நீண்ட தூர பயணத்தில் சிறிய படி. நாங்கள் மீண்டும் செல்கிறோம்! என்று பதிவிட்டுள்ளார்.

 

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!