அபார சாதனையை படைத்த மும்பை டீம்! அதுக்குன்னு இப்படியா?

First Published May 2, 2018, 5:12 PM IST
Highlights
Rohit Sharma upset with silly mistakes


ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியின் இந்த சீசனில் மும்பையின் இஷான் கிஷண் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாவது முறையாக கோல்டன் டக் ஆகி அபார(மோசமான) சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடக்கிறது. இதில் பெங்களூருவில் நடக்கும் 31வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின.  முதலில் ஆடிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 168 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணியில், இஷான் கிஷான் முதல் ஓவரிலேயே ’Duck Out’ ஆனார். இந்த சீசனில் மட்டும் அவர் இது போன்று மூன்று முறை ஆட்டமிழந்துள்ளார்.

இந்த சீசனில் அவர் மூன்று முறை ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகியுள்ளார். அதில் இரண்டாவது முறையாக முதல் பந்திலேயே அவுட்டாகி, கோல்டன் டக் அவுட்டானார்.

இஷான் கிஷானைத் தொடர்ந்து, களமிறங்கிய மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா “Golden Duck Out”ஆனார். அவர் இரண்டாவது முறையாக இந்த சீசனில் “Duck Out” ஆகியுள்ளார். மேலும், ஐ.பி.எல் போட்டிகளில் இதுவரை 9 முறை “கோல்டன் டக்-அவுட்” ஆகியுள்ளார். இந்நிலையில், இந்த சீசனில் மும்பை அணியைச் சேர்ந்த 12 வீரர்கள்’Duck Out’ஆகி, புதிய சாதனையை படைத்துள்ளனர். அவர்களில் 8 பேர் ‘Golden Duck Out’ஆகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தான் மிகவும் குறைவாக 2 பேர் மட்டுமே ‘Duck Out’ ஆகியுள்ளனர். கடந்த போட்டியில் கிஷானும், சூர்யகுமார் யாதவும் ‘Duck Out’ஆகினர்.

 

 

click me!