4 போட்டியில் 40 ரன்.. பேட்டிங்கை விட பெவிலியனை நேசிக்கும் ரோஹித் சர்மா!! வழக்கம்போல வந்ததும் போயிட்டாரு

First Published Feb 10, 2018, 5:25 PM IST
Highlights
rohit sharma loves pavilion than batting


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, வழக்கம்போல வந்ததும் அவுட்டாகி வெளியேறினார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இதுவரை ரோஹித் சர்மா ஒரு போட்டியில் கூட சிறப்பாக விளையாடவில்லை. டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் சோபிக்காத ரோஹித் சர்மா, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக அஜிங்கியா ரஹானே களமிறக்கப்பட்டார். முதல் இரண்டு போட்டிகளிலேயே ரோஹித் களமிறக்கப்பட்டது விமர்சனத்துக்கு உள்ளானது.

டெஸ்டில் தான் சரியாக விளையாடவில்லை.. ஒருநாள் போட்டியிலாவது தென்னாப்பிரிக்காவை தனது அதிரடியால் ரோஹித் புரட்டி எடுப்பார் என்று பார்த்தால்.. அவரைத்தான் தென்னாப்பிரிக்க பவுலர்கள், குறிப்பாக ரபாடா புரட்டி எடுக்கிறார்.

முதல் போட்டியில், 20 ரன்களுக்கு மோர்கலின் பந்தில் ரோஹித் அவுட்டானார். அதன் பிறகு மூன்று ஆட்டங்களிலும் ரபாடாவின் பந்துவீச்சில் தான் ரோஹித் வெளியேறியுள்ளார். 

இரண்டாவது ஆட்டத்தில் 15 ரன், மூன்றாவது போட்டியில் பூஜ்ஜியம், இன்றைய நான்காவது போட்டியில் 5 ரன்  என எந்த போட்டியிலும் ரோஹித் சரியாக ஆடவில்லை. இந்த மூன்று போட்டிகளிலும் ரபாடாவின் பந்துவீச்சில் ரோஹித் அவுட்டாகியுள்ளார்.

இன்றைய போட்டியில் ரபாடா பவுலிங்கில் அவரிடமே கேட்ச் கொடுத்து ரோஹித் பெவிலியன் திரும்பினார்.

ரோஹித்துக்கு பேட்டிங்கைவிட தென்னாப்பிரிக்க மைதானங்களின் பெவிலியன் தான் பிடித்திருக்கிறதோ என கேட்கும் அளவிற்கு வந்ததுமே நடையை கட்டுகிறார் ரோஹித்.
 

click me!