கைகொடுக்குமா “பிங்க் டே” லக்..? தொடர் தோல்வியிலிருந்து மீளுமா தென்னாப்பிரிக்கா? இந்தியா பேட்டிங்

First Published Feb 10, 2018, 4:45 PM IST
Highlights
india first batting in fourth one day match


நான்காவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்துவருகிறது.

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 3-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது. இன்னும் மூன்று போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், அதில் ஒரு போட்டியில் வென்றாலே இந்தியா தொடரை வென்றுவிடும்.

இந்நிலையில், நான்காவது ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். 

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

காயம் காரணமாக கடந்த மூன்று போட்டிகளில் விளையாடாத டிவில்லியர்ஸ் இந்த போட்டியில் களமிறங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல், பிங்க் நிற ஆடை அணிந்து தென்னாப்பிரிக்க அணி இந்த போட்டியில் விளையாடுகிறது. பிங்க் நிற ஆடையில் அந்த அணி தோல்வியுற்றதே கிடையாது. டிவில்லியர்ஸின் வருகையும் பிங்க் நிற ஆடையின் ராசியும் அந்த அணிக்கு கைகொடுக்குமா? அல்லது சாஹல், குல்தீப்பின் அபார பந்துவீச்சால் இந்திய அணி மீண்டும் வெல்லுமா? என்பதை பார்ப்போம்..

இந்த போட்டியில் ஸ்ரேயாஷ் ஐயருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கேதர் ஜாதவ் நீக்கப்பட்டுள்ளார்.
 

click me!