
இந்திய அணியின் கேப்டன் கோலியின் கேப்டன்ஷிப் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி கருத்து தெரிவித்துள்ளார்.
கோலியின் கேப்டன்ஷிப் மீதான விமர்சனங்களும் சந்தேகங்களும் எழுந்த நிலையில், கங்குலி உள்ளிட்ட சிலர் கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். நெருக்கடியான நிலையையும் கூலாக எதிர்கொள்ளும் தோனிக்கு நேரெதினாவர் கோலி.
களத்தில் ஆக்ரோஷமாகவே இருப்பார் கோலி. அது அவருடைய அணுகுமுறையாக இருந்தாலும்கூட, அதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்த போது கோலி மீது பல விமர்சனங்கள் எழுந்தன.
கோலியை கட்டுப்படுத்தும் திறன் வாய்ந்த பயிற்சியாளர் தேவை, பிசிசிஐ-யில் கோலியின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால், தன் மீதான விமர்சனங்களுக்கு எல்லாம், தனது பேட்டிங்காலும் முதல் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றிகளை பதிவு செய்தும் பதிலடி கொடுத்தார் கோலி. இதையடுத்து ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் அபார ஆட்டமும் கோலியின் சிறப்பான பேட்டிங்கும் பாராட்டுகளை குவித்து வருகிறது.
இந்நிலையில், கோலியின் கேப்டன்ஷிப் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அஃப்ரிடி, இந்திய அணியை கோலி அடுத்த லெவலுக்கு எடுத்து சென்றுள்ளார்.
தோனி மிகவும் கூலான மனிதர்; அவருடைய தலைமை வேறு மாதிரி இருக்கும். ஆனால் கோலி, ஒரு கேப்டனாக ஆக்ரோஷமாக செயல்படுகிறார்.
அது இந்திய அணிக்கும் இளம் வீரர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது என அஃப்ரிடி கருத்து தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.